Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி செய்ததை நீங்க எப்போது செய்வீங்க.. உங்க இடத்தை விட்டு கொடுங்க.. வசீம் ஜாபர் கோரிக்கை

மும்பை : தோனி செய்ததை தாங்கள் எப்போது செய்யப் போகிறீர்கள் என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு முன்னாள் வீரர் வசீம் ஜாபர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended Video

India-வுக்கு புது T20 WC Jersey! Sky Blue Return ஆயிடுச்சு | Aanee's Appeal

டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட வீரர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் அணி குறித்து பல்வேறு பல்வேறு தரப்பு கருத்துகளை கூறி வருகின்றனர். இதில் வசீம் ஜாபர் கூறிய கருத்து அனைவராலும் கவனிக்கப்படுகிறது.

தொடக்க வீரர் யார்?

தொடக்க வீரர் யார்?

டி20 உலக கோப்பை போட்டியில் தொடக்க வீரர் யார் என்ற கேள்வி இன்னும் முடிவு செய்யவில்லை. கே.எல் ராகுல் அந்த இடத்திற்கு சரி வர மாட்டார் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், பிசிசிஐ அவரை துணை கேப்டனாகவும் அறிவித்து தொடக்க வீரர் அவர்தான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டது. ஆனால் ராகுல் ஸ்ட்ரைக் ரேட் இந்திய அணிக்கு பாதகமாக முடியும் என்று பலரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

வசீம் ஜாபர் கருத்து

வசீம் ஜாபர் கருத்து

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வசீம் ஜாஃபர் ரோகித் சர்மாவுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி தோனி கேப்டனாக இருந்தபோது நடுவரிசையில் விளையாடிக் கொண்டிருந்த ரோகித் சர்மாவை தொடக்க வீரராக ப்ரோமோஷன் செய்தார்.இதன் பிறகு நடந்தது வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா அதே போல் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

தொடக்க வீரராக ரிஷப் பண்ட்டை ப்ரோமோஷன் செய்ய வேண்டும். டி20 ஒருநாள் போட்டிகளில் பண்ட் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக இறங்கினால் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும் என்று அவர் கூறினார். இதேபோன்று ரோகித் சர்மா தனது இடத்தை தியாகம் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் ஒரு காலத்தில் ரோகித் சர்மா நடு வரிசையில் விளையாடி நன்றாக செயல்பட்டு இருக்கிறார்.

டாப் 5 பேட்டிங் வரிசை

டாப் 5 பேட்டிங் வரிசை

இதனால் ரிஷப் பண்ட்க்கு, தொடக்க வீரராக தனது இடத்தை கொடுத்துவிட்டு ரோகித் சர்மா நான்காவது வரிசையில் விளையாட வேண்டும். கேஎல் ராகுல் துணை கேப்டனாக இருப்பதால் அவர் தொடக்க வீரருக்கு தான் சரி வருவார். அவருக்கு ஜோடியாக ரிஷபன்ட் களமிறங்க வேண்டும் மூன்றாம் வீரராக விராட் கோலி, நான்காவது வீரராக ரோகித் சர்மா, ஐந்தாவது ஆக சூரியகுமார் யாதவ் என பேட்டிங் வரிசையில் இருந்தால் அது இந்திய அணிக்கு சாதகமான சூழலாக அமையும் என்று வசீம் ஜாஃபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Story first published: Wednesday, September 14, 2022, 10:17 [IST]
Other articles published on Sep 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+