Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரு நல்ல பிளேயர்.. ஆனா தப்பு பண்றாரே.. துவக்க வீரரை பற்றி புட்டு புட்டு வைத்த முன்னாள் வீரர்!

Recommended Video

IND VS WI TEST 2019 | ராகுலுக்கு அவ்ளோ தான் வாய்ப்பு.. கோலி கறார் முடிவு!- வீடியோ

மும்பை : இந்திய அணியின் துவக்க வீரர் ராகுல் டெஸ்ட் போட்டிகளில் சரியாக பேட்டிங் செய்வதில்லை என ரசிகர்களிடம் திட்டு வாங்கி வருகிறார்.

அதோடு நிற்காமல், முன்னாள் வீரர்களும் வரிந்து கட்டிக் கொண்டு அவரை பற்றி நல்ல விதமாக கூறி விட்டு பின்னர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் சேர்ந்துள்ளார் இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர். ராகுல் செய்யும் தவறுகளை பட்டியலிட்டு இருக்கிறார் இவர்.

ராகுல் டெஸ்ட் பார்ம்

ராகுல் டெஸ்ட் பார்ம்

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய டெஸ்ட் அணியில் துவக்க வீரராக வாய்ப்பு பெற்றார் ராகுல். இரண்டு போட்டிகளில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் அவர். ஒரு அரைசதம் அடித்து இருந்தால் கூட தப்பித்து இருக்கலாம்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

ஆனால், முதல் டெஸ்டில் 44, 38 ரன்கள் எடுத்தார். இரண்டாம் டெஸ்டில் மொத்தமே 19 ரன்கள் தான் எடுத்தார். அதிலும் இரண்டாம் இன்னிங்க்ஸில் 63 பந்துகளை சந்தித்து 6 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். அதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது.

திறமை உள்ளது

திறமை உள்ளது

ராகுல் பற்றி பேசிய வாசிம் ஜாபர் கூறியது - ராகுல் குறித்து எனக்கு ஏமாற்றமாக உள்ளது. அவரிடம் திறமை உள்ளது. மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த வீரர்களில் அவரும் ஒருவர்.

ஏமாற்றமாக உள்ளது

ஏமாற்றமாக உள்ளது

ஆனால், அவர் ஆட்டமிழக்கும் விதம் எனக்கு மிகவும் ஏமாற்றமாக உள்ளது. சில சமயம் மிகவும் எளிதாக ஆட்டமிழந்து விடுகிறார். அவருக்கு நிறைய திறமை இருப்பதால் தான் நிறைய வாய்ப்பு பெற்று வருகிறார். மக்கள் அவர் நல்ல விதமாக வருவார் என எண்ணுகிறார்கள்.

புதிரின் ஒரு பகுதி

புதிரின் ஒரு பகுதி

ஆனால், அவர் ஆட்டமிழக்கும் விதம், அவர் அதிக ரன் குவிக்காமல் இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. எங்கேயோ அவர் புதிரின் ஒரு பகுதியை இழந்து இருக்கிறார் என நினைக்கிறேன் என்றார் ஜாபர்.

மனதளவில் சிக்கல்

மனதளவில் சிக்கல்

மனதளவில் கூட அவருக்கு சிக்கல் இருக்கலாம் என்று கூறிய ஜாபர், அவரே அவரை பிடித்து வைத்துக் கொண்டு இருக்கிறார் என நினைக்கிறேன். உள்ளூர் முதல் தர போட்டிகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அவர், சர்வதேச அரங்கில் தன்னை சற்றே நிறுத்தி வைத்துக் கொள்கிறார் என்றார்

டெஸ்டில் ரோஹித் சர்மா

டெஸ்டில் ரோஹித் சர்மா

ராகுல் எப்படியும் டெஸ்ட் அணியில் தன் இடத்தை இழப்பார் என்ற நிலை இருப்பதால், அந்த இடத்துக்கு யாரை ஆட வைக்கலாம் என்ற பேசும் எழுந்துள்ளது. ரோஹித் சர்மாவை துவக்க வீரராக ஆட வைத்து பார்க்கலாம். அப்போது தான் அவர் என்ன செய்கிறார் என்பது தெரியும் என்றார் ஜாபர்.

கங்குலி கருத்து

கங்குலி கருத்து

இதற்கு முன்னர் கங்குலியும் இதே விஷயம் பற்றி தன் கருத்தை கூறி இருந்தார். அவரும் ராகுல் நிறைய வாய்ப்புகளை பெற்று விட்டார். அதனால், அவரை நீக்கி விட்டு டெஸ்டில் வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் ரோஹித் சர்மாவை துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என கூறி இருந்தார்.

கோலி கையில் முடிவு

கோலி கையில் முடிவு

கேப்டன் கோலி தான் இது குறித்து முடிவு எடுக்க வேண்டும். தனக்கு பிடித்த வீரர்களில் ஒருவரான ராகுலுக்கு மேலும் வாய்ப்பு கொடுப்பாரா? அல்லது மூத்த வீரரான ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக தொடர்ந்து வாய்ப்பு அளிப்பாரா?

Story first published: Friday, September 6, 2019, 16:57 [IST]
Other articles published on Sep 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+