Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார் வராரு... ஹிட்மேன் வராரு... இதெல்லாம் மக்களே உங்களுக்கு நல்லா தெரியும்... ஜாபர் மீம்ஸ்

டெல்லி : என்சிஏவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்திய அணி துவக்க வீரர் ரோகித் சர்மா தனது பிட்னசில் தேர்வாகியுள்ளார். இன்று தனது ஆஸ்திரேலிய பயணத்தை அவர் துவக்கவுள்ளார்.

இந்நிலையில் அவரது வருகை குறித்து சக வீரர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பல்வேறு மீம்ஸ்களும் சமுகவலைதளங்களில் வலம்வரும் நிலையில் முன்னாள் வீரர் வாசிம் ஜாபரும் இதுகுறித்து மீம்ஸ் வெளியிட்டுள்ளார்.

என்சிஏவில் பயிற்சி

என்சிஏவில் பயிற்சி

இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் தொடரில் மட்டுமே பங்கேற்றிருந்தார். ஆனால் அதிலும் தன்னுடைய பிட்னசை நிரூபிக்கும் கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருந்தது. இதையொட்டி அவர் என்சிஏவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

யூஏஇ பயணம்

யூஏஇ பயணம்

அவர் தனது 70 சதவிகித பிட்னசை மட்டுமே நிரூபித்திருந்த நலையில், நேற்று முன்தினம் அவருக்கு பிட்னஸ் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் அவர் தனது பிட்னசை நிரூபித்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் இன்று தனது யூஏஇ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

அவர் சிட்னியில் தனது குவாரன்டைனை முடித்த பின்பு அவருக்கு மீண்டும் டெஸ்ட் எடுக்கப்பட்டு, அதையடுத்தே அவர் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ரோகித் சர்மா தனது பிட்னசை நிரூபித்துள்ளதை அவரது ரசிகர்கள் மற்றும் பல்வேறு முன்னாள் வீரர்களும் வரவேற்றுள்ளனர்.

மக்களுக்கு தெரியும்

மக்களுக்கு தெரியும்

சமூகவலைதளங்களில் அவருக்கு ஆதரவாக பல்வேறு மீம்களும் உலா வந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் முன்னாள் வீரர் வாசிம் ஜாபரும் ரோகித் சர்மாவின் வருகையையொட்டி ஒரு மீமை வெளியிட்டுள்ளார். ஹிட்மேன் வருகை குறித்து மக்கள் அனைவருக்கும் தெரியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஆதரவாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Story first published: Sunday, December 13, 2020, 12:09 [IST]
Other articles published on Dec 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+