Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாசிம் ஜாஃபர் தேர்வுக்குழு தலைவராக ஆகவே கூடாது.. பிசிசிஐ ஆடிய கேம்.. டெஸ்ட் அனுபவமே வில்லனாக மாறியது

மும்பை: பிசிசிஐயின் 5 பேர் கொண்ட இந்திய அணி தேர்வுக் குழுவில், மேற்கு மண்டலப் பிரதிநிதியாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவார் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். மிகச் சிறந்த அனுபவம் வாய்ந்த முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாஃபரை ஓரங்கட்டிவிட்டு ரமேஷ் பவாருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாசிம் ஜாஃபரின் சர்வதேச கிரிக்கெட் அனுபவமே அவருக்கு எதிராகத் திரும்பி, பதவி பறிபோக முக்கியக் காரணமாக அமைந்தது என்ற தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளிலும், 260 முதல்தரப் போட்டிகளிலும் விளையாடியுள்ள வாசிம் ஜாஃபர், வங்கதேச அணி மற்றும் ஐபிஎல் அணிகளுக்குப் பயிற்சியாளராகப் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர். முன்னாள் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரை விடவும், ரமேஷ் பவாரை விடவும் ஜாஃபர் அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். ஆனால் பிசிசிஐ விதிமுறைகளின்படி, தேர்வுக் குழுவில் உள்ள 5 உறுப்பினர்களில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நபரே தேர்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட வேண்டும். ஜாஃபரைத் தேர்வு செய்தால், தற்போது 24 டெஸ்ட்களில் ஆடியுள்ள இடைக்காலத் தலைவர் பிரக்யான் ஓஜாவை நீக்கிவிட்டு ஜாஃபரைத் தலைவராக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

Wasim Jaffer rejected by BCCI for Selector role due to his higher test match experience

ரமேஷ் பவாரைத் தேர்வு செய்தால் ஓஜாவை விட குறைந்த டெஸ்ட் அனுபவம் கொண்டவர் என்பதால், ஓஜா தொடர்ந்து தேர்வுக் குழு தலைவராக நீடிக்க முடியும். அடுத்த ஆண்டு 2027 ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ள சூழலில், புதிய தலைவரை நியமிப்பது தேவையற்ற குழப்பத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தும் என பிசிசிஐ கருதியுள்ளது. முன்னாள் தலைவர் அஜித் அகர்கருடன் 2 ஆண்டுகள் இணைந்து பணியாற்றிய பிரக்யான் ஓஜாவே, ஏற்கனவே உள்ள நடைமுறைகளைச் சுமூகமாக முன்னெடுத்துச் செல்லச் சரியான நபர் என பிசிசிஐ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

“தோனியே ஹர்திக் உடன் பேசி சிஎஸ்கேவுக்கு கொண்டு வருவார் என்கிறார்கள் ஆனால்..”.. அஸ்வின் பேச்சு

“தோனியே ஹர்திக் உடன் பேசி சிஎஸ்கேவுக்கு கொண்டு வருவார் என்கிறார்கள் ஆனால்..”.. அஸ்வின் பேச்சு

அசோக் மல்கோத்ரா தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழு இந்த நேர்காணலை நடத்தியது. அப்போது, ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் எதிர்காலத் திட்டம் என்ன, அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கான இடம் மற்றும் சுப்மன் கில்லுக்கு மாற்று பேட்டராக யாரைத் தேர்வு செய்யலாம் என்பது போன்ற மிக முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Sunday, October 18, 2026, 18:02 [IST]
Other articles published on Oct 18, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+