Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுமட்டும் நடந்திருந்தா என்ன ஆயிருக்கும்??.. உலக சாதனைக்கே வரவிருந்த விணை.. பும்ராவின் அதிர்ஷ்டம்!!

பெர்மிங்கம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா செய்த விஷயம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 98 / 5 என தடுமாறிய போதும் இறுதியில் 416 /10 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி ஆட்டம்

இந்திய அணி ஆட்டம்

இந்திய அணியின் இந்த அட்டகாச கம்பேக்கிற்கு ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் சதங்கள் முக்கிய காரணம். இது மட்டுமின்றி கடைசி நேரத்தில் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்த உலக சாதனையும் அதிக கவனத்தை ஈர்த்தது. அவர் 16 பந்துகளில் 31 ரன்களை அடித்தார்.

புதிய சாதனை

புதிய சாதனை

ஆட்டத்தின் 84வது ஓவரில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா சிக்ஸர், பவுண்டரி என அடுத்தடுத்து பறக்கவிட்டு 35 ரன்களை குவித்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.

சுவாரஸ்ய நிகழ்வு

சுவாரஸ்ய நிகழ்வு

இந்நிலையில் இதே ஓவரில் ஒரு சிறிய தவறால் பும்ரா உலக சாதனையை தவறவிட்டிருப்பார். அந்த ஓவரின் 4வது பந்தை பிராட் பவுன்சராக வீச, அதனை புல் ஷாட் மூலம் பும்ரா பவுண்டரி அடித்தார். ஆனால் பேலன்ஸ் தவறிய அவர், களத்தில் நின்ற இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

ஹிட் விக்கெட்?

அப்போது அவரின் கால்கள் எதிர்பாராத விதமாக ஸ்டம்பின் மீது உரசிச் சென்றது. அனைவரும் அவர் ஹிட் விக்கெட் ஆகிவிடுவார் என்று தான் பதறினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஸ்டம்ப்களில் இருந்த பெயில் கீழே விழாமல் இருந்ததால் தப்பினார். மேலும் அதன்பின்னர் சிக்ஸர் அடித்து உலக சாதனை படைத்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Story first published: Saturday, July 2, 2022, 21:05 [IST]
Other articles published on Jul 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+