Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொப்பி..தொப்பி.. பயிற்சியின் போது நிகழ்ந்த காமெடி.. பாவம் நம்ம ரோகித் சர்மா

பெங்களூரு: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் தொடங்குவதற்கு முன் ஒரு காமெடி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெங்களூருவில் நடைபெற்ற 2வது பகல் இரவு டெஸ்ட் போட்டியில் டாஸ வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

Watch the Hilarious Video of Rohit sharma losing his cap during warm up

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டத்தால் 252 ரன்கள் சேர்த்தது.

இதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. பும்ரா 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இந்த நிலையில், நேற்று போட்டி தொடங்குவதற்குள் முன் ஒரு காமெடி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரோகித் சர்மாவின் உடல் தகுதி மற்றும் உடல் அமைப்பை வைத்து எப்போதும் சில ரசிகர்கள் விமர்சித்து கிண்டல் செய்வார்கள். அவர்களுக்கு எப்போதும் தனது பேட்டிங் மூலம் பதிலடி தரும் ரோகித் சர்மா, தற்போது உடல் எடையையும் குறைத்து ஃபிட்டாக உள்ளார்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற Warm up பயிற்சியில் இந்திய வீரர்கள் மைதானத்தை சுற்றி வலம் வந்தனர். அப்போது ரோகித் சர்மா கடைசியாக வந்தார். தாம் தலையில் அணிந்திருந்த தொப்பி காற்றில் பறந்து கீழே வர, அதனை சிலர் எடுத்து கொடுத்தனர். மீண்டும் ரோகித் ஓட ஆரம்பித்த உடன் திரும்பவும் அந்த தொப்பி பறந்தது. இதனால் கடுப்பான ரோகித் மீண்டும் அந்த தொப்பியை பிடித்து கொண்டு ஓடினார்.

Story first published: Sunday, March 13, 2022, 13:21 [IST]
Other articles published on Mar 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+