Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிர்ச்சி வீடியோ.. உலகக் கோப்பை ஆட்டத்தின் போது தாக்கிய பூகம்பம்..!! மைதானம் குலுங்கிய காட்சி இதோ..

போர்ட் ஆப் ஸ்பைன்: அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பூகம்பம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது.

மெயின் குரூப்பில் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளும் மோத உள்ளன.

பிளேட் சுற்று

பிளேட் சுற்று

இந்த நிலையில், தொடரிலிருந்து வெளியேறிய அணிகளுக்கு இடையே தரவரிசையை நிர்ணயிக்க பிளேட் சுற்றுகள் போட்டி நடைபெறும். இதில் டிரின்டாட் பகுதியில் குயின்ஸ் பார்க் மைதானத்தில் ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் மோதின.

பூகம்பம்

பூகம்பம்

இந்த போட்டியின் போது ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது ஆட்டத்தின் 11வது ஓவரில் வீரர்கள் விளையாடி கொண்டிருந்த போது, கேமிராக்கள் திடீரென்று ஆடியது. இதனை கண்ட பார்வையாளர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தான், கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டு இருந்த ஆண்டிரூ லேனார்ட், பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்

குலுங்கிய மைதானம்

குலுங்கிய மைதானம்

பூகம்பம் நடுலிவ் நாம் சிக்கியுள்ளோம் என்பதை உணர்கிறேன். முதல் முறையாக நான் நிலநடுக்கத்தை உணர்கிறேன். பெரிய ரயில், பின்னால் ஓடினால் எப்படி நிலம் அதிருமோ, அது போல் நிலம் அதிர்கிறது. மைதானம் கட்டிடங்கள் கடுமையாக குலுங்குகின்றன என்று நேரலையில் கூறினார். நிலநடுக்கம் சுமார் 15 முதல் 20 விநாடிகள் வரை நீடித்தது.

கண்டுகொள்ளாத வீரர்கள்

கண்டுகொள்ளாத வீரர்கள்

ரிக்டர் அளவு கோளில் 5.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டதை உணராத கிரிக்கெட் வீரர்கள், யாரும் இல்லாத கடைக்கு எதுக்கு டா டீ ஆத்துற, உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாடா என்ற விவேகக் காமெடி போல் தங்களது ஆட்டத்தை வழக்கம் போல் தொடர்ந்தனர். அதன் பிறகு ஆட்டம் எவ்வித தடையும் இன்றி தொடங்கியது. இதில் ஜிம்பாப்வே அணி 166 ரன்கள் எடுக்க, அந்த இலக்கை அயர்லாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 30 வது ஓவரில் வெற்றி பெற்றது.

Story first published: Sunday, January 30, 2022, 15:31 [IST]
Other articles published on Jan 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+