வீடியோ - இது வேண்டாத வேலை.. உஸ்மான் கவாஜா மீது பந்தை எறிந்த கேஎஸ் பரத்.. பதிலடி கொடுத்த ஆஸி அணி
அகமதாபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் உஸ்மான் கவாஜா மீது இந்திய வீரர் கேஎஸ் பரத், பந்தை எறிந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற 4வது டெஸ்டில் இந்திய வீரர்கள் விக்கெட் எடுக்க தடுமாறி வருகின்றனர். தங்களுக்கு கிடைத்த அல்வா போன்ற வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்திரேலிய வீரர்கள் ரன்களை சேர்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில், விக்கெட்டுகள் விழாத சமயத்தில் எப்போதும் பேட்ஸ்மேன்களின் கவனத்தை சிதைக்கும் வகையில் பந்து வீசும் அணி நடந்து கொள்ளும்.

ஷாட் பால்
அந்த வகையில் உஸ்மான் கவாஜா நங்கூரம் போட்டு ஆமை வேகத்தில் ரன்கள் சேர்த்து வருகிறார். உஸ்மான் கவாஜாவை ஆட்டமிழக்க இந்திய வீரர்கள் எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதனால், ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட்டை வீழ்த்த இந்திய வீரர்கள் ஷாட் பந்தை பயன்படுத்தி நெருக்கடியை ஏற்படுத்த முயற்சி செய்தார்கள்.

கேஎஸ் பரத்தின் செயல்
அப்போது ஷமி வீசிய ஷாட் பால் ஒன்றை லாவகமாக எதிர்காண்டு கவாஜா தன்னை காப்பாற்றி கொண்டார். அப்போது பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத், பந்தை தூக்கி மீண்டும் எறிய, அது உஸ்மான் கவாஜா மீது பட்டது. இதனால் கடுப்பான கவாஜா, பரத்தை பார்த்து, தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்தினார்.
பதிலடி
எனினும் கேஎஸ் பரத் ஓடி சென்று கவாஜாவிடம் மன்னிப்பு கேட்டார். இது வேண்டும் என்று செய்ததாக பார்ப்பதற்கு தெரியவில்லை என்றாலும், இது, பேட்ஸ்மேன்களின் கவனத்தை சிதைக்கும் தவறான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் கவாஜா தற்போது பேட்டிங்கில் கலக்கி வருகிறார்.

கேட்ச் மிஸ்
கேஎஸ் பரத்துக்கு அகமதாபாத் டெஸ்ட் போட்டி போதாத காலமாக உள்ளது. ஏற்கனவே பேட்டிங்கில் சொதப்பி வந்த கேஎஸ் பரத், இம்முறை விக்கெட் கீப்பிங்கிலும் முக்கிய கேட்ச் ஒன்றை விட்டார். இது உமேஷ் யாதவின் உத்வேகத்தை வெகுவாக பாதித்தது. இதுவே அந்த கேட்ச்சை பரத் பிடித்திருந்தால் உமேஷ் யாதவ்வின் நம்பிக்கை அதிகமாகி அவர் சிறப்பாக பந்துவீசி இருப்பார்.


Click it and Unblock the Notifications