வீடியோ - ஸ்டம்புகளை தெறிக்கவிட்ட முகமது ஷமி.. 2 வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வேகம்
அகமதாபாத் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் முகமது ஷமி ஆக்ரோஷமாக பந்துவீசி விகெட்டுகளை வீழ்த்தி வருகிறார்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்ற உத்வேகத்தில் விளையாடி வருகிறது.
3வது டெஸ்டில் விளையாடாமல் சுமார் 15 நாட்களுக்கு பிறகு ஓய்வில் இருந்த முகமது ஷமி, கடைசி டெஸ்ட்க்கு திரும்பினார். முகமது ஷமி வீசிய முதல் பந்தே தவறான லைனில் போக, சிலிப்பில் நின்றவரிடம் சென்றது.

நெருக்கடி
இதே போன்று தொடர்ந்து சரியான லைனில் வீச முடியாமல் முகமது ஷமி தடுமாறி வந்தார். இதனால் இந்திய அணிக்கு கூடுதல் ரன்கள் சென்றது. எனினும் முகமது ஷமி கொஞ்ச நேரத்திலேயே தன்னுடைய லைனை கண்டுபிடித்து ஆஸ்திரேலிய வீரர்களை நெருக்கடிக்கு ஆளாக்கினார்.

பறந்த ஸ்டம்ப்
ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மார்னஸ் லாபஸ்சேன் 3 ரன்கிளில் இருந்த போது, முகமது ஷமி வீசிய பந்து அவருடைய ஸ்டம்பை பதம் பார்த்தது. இது ஆஸ்திரேலியாவுக்கு பெரிய மைனசாக பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடப்பு தொடரில் அபாரமாக விளையாடிய பீட்டர் ஹ்ண்ட்ஸ்கோம்ப்பும் முகமது ஷமி பந்தில் வெளியேறினார்.

ஆதிக்கம்
17 ரன்களில் இருந்த போது, சிறிய அளவில் ரிவர்ஸ் ஸ்விங் பந்தை பயன்படுத்தி முகமது ஷிமி வீசிய பந்து, பீட்டர் ஹாண்ட்ஸ்கோப் ஸ்டம்ப்பை சிதறடித்தார், மேலும் தொடர்ந்து ஆஸ்ரேலிய வீரர்களுக்கு நெருக்கடி தரும் விதமாக முகமது ஷமி பந்தில் ஷாட் பாலாக வீசினார்.
ரசிகர்கள் கேள்வி
இதன் மூலம் ஆட்டத்தின் தொடக்கத்தில் தடுமாறிய ஷமி, பிறகு தன்னுடைய மேஜிக்கை கண்டெடுத்து பட்டையை கிளப்பினார். ஷமியின் இந்த அபார பந்துவீச்சை சுட்டிக்காட்டியுள்ள ரசிகர்கள், இந்தூர் டெஸ்ட் போட்டியில் ஷமி இல்லாததே இந்திய அணி தோல்வி பெற்றதாகவும், அவருக்கு ஏன் ஓய்வு வழங்கினார்கள் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications