Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL - ஆள விடுடா சாமி.. தோனி செய்த சேட்டை. தெறித்து ஓடிய தீபக் சாஹர்.. காமெடி வீடியோ

பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது தோனி செய்த சேட்டை ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.

இதில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 226 ரன்களை எடுத்தது. சிஎஸ்கே அணியில் தற்போது தோனி பேட்டிங்கிற்கு கடைசி கட்டத்தில் தான் இறங்குகிறார். தனக்கு ஏற்பட்ட காயத்தால் தோனி பேட்டிங் செய்வதை தவிர்த்து வருகிறார்.

Watch the video - MS Dhoni Batting practice in dug out made Deepak chahar frightened

லக்னோ அணிக்கு எதிராக மூன்று பந்துகளை எதிர்கொண்ட தோனி, பெங்களூர் அணிக்கு எதிராக ஒரு பந்தை மட்டும் தான் எதிர்கொண்டார். களத்திற்கு வருவதற்கு முன் தோனி எப்போதும் Warm up செய்வது வழக்கம். அதாவது முதல் பந்திலே சிக்ஸர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் தோனி களத்திற்கு வருகிறார். இதற்கு ஏற்ப தன்னை முன்கூட்டியே தோனி எப்போதும் தயார்படுத்திக் கொள்வார்.

அப்படித்தான் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி வீரர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் பேட்டிங் பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது தோனியின் பேட் அருகில் அமர்ந்திருந்த தீபக் சாஹரை பயமுறுத்தியது. தீபக் சாஹர் முகம் வரை அந்த பேட் வந்தது.

எனினும் இதனை தோனி கண்டு கொள்ளவே இல்லை. இதனால் அதிர்ந்த தீபக் சாஹர் ஆள விடுடா சாமி என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட்டார். ஏற்கனவே தீபக் சாஹருக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தோனி பேட்டால் முகத்தில் அடித்து இருந்தால் அவர் நிலைமை என்ன ஆகி இருக்கும்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. பலரும் தோனி சேட்டை பிடித்த ஆளுயா என கிண்டல் செய்து வருகிறார்கள். மேலும் சிலர் எதற்கும் தோனி பயிற்சி செய்யும் போது சிஎஸ்கே வீரர்கள் பாதுகாப்பாக இருங்கள் என்றும் கூறியுள்ளனர்.

Story first published: Wednesday, April 19, 2023, 9:51 [IST]
Other articles published on Apr 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+