Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பைனலுக்கு முன்னாடி கூலாக இருக்காங்களாமா! மைதானத்திற்குள் டிரிபிள்ஸ் போன நெஹ்ரா.. ரசிகர்கள் கிண்டல்

அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பல பரிட்சை நடத்துகிறது. இந்த நிலையில் இந்தப் போட்டியில் சிஎஸ்கே வெல்லுமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

ஆனால் குஜராத் அணியும் அசுர பலத்துடன் இருக்கிறார்கள். அதுவும் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் அணி விளையாடிய 9 ஆட்டங்களில் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

Watch the video of Ashish nehra going triples in the stadium ahead of final

மேலும் அந்த மைதானத்தில் சுப்மன் கில் அசுரத்தனமான பார்மில் இருக்கிறார். முகமது ஷமியும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். குறிப்பாக எட்டு ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளை முகமது சமி அங்கு வீழ்த்திருக்கிறார்.எனினும் சிஎஸ்கே அணி சென்னையில் நடைபெற்ற குவாலிஃபயர் ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் எங்களுக்கு பயம் இல்லை.

நாங்கள் கூலாக இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக குஜராத் அணி வீரர்கள் ஒரு காரியத்தை செய்திருக்கிறார்கள். மைதானத்தில் பயிற்சி செய்ய வந்த அவர்கள் செய்த சேட்டை தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது மைதானத்தில் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆசிஸ் நெஹ்ரா, ரஷித் கான் மற்றும் மோகித் சர்மாவை தனது ஸ்கூட்டியில் வைத்துக்கொண்டு மைதானத்தை சுற்றி ட்ரிபிள்ஸ் சென்றார்கள்.

Watch the video of Ashish nehra going triples in the stadium ahead of final

இது பார்ப்பதற்கு ரசிக்கும் வகையில் இருந்தாலும் ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். போக்குவரத்து விதிகளுக்கு மீதி ட்ரிபிள்ஸ் செல்வது சரியா? சமூக வலைத்தளத்தில் யாரேனும் போக்குவரத்து விதிகளை மீறினால் அதனை போட்டோ எடுத்து புகார் சொல்லுங்கள் என சொல்லும் காவல்துறை, இந்த வீடியோ மீது நடவடிக்கை எடுக்குமா என்றும் கேட்டு வருகிறார்கள். மேலும் சிலர் முக்கியமான போட்டிக்கு முன்பு இப்படி அபாயகரமாக வண்டியை ஓட்டுவது வீரர்களுக்கு காயத்தை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

Story first published: Saturday, May 27, 2023, 23:50 [IST]
Other articles published on May 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+