Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா Vs ஆஸி. கிரிக்கெட்.. டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்.. போலீசார் தடியடி.. பரபரப்பான வீடியோ

ஹைதராபாத்: இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

கடைசியாக ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சர்வதேச போட்டி நடைபெற்றது.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் இந்தியா அணிகள் மோதின. இதில் விராட் கோலி 50 பந்துகளில் 94 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

டிக்கெட் விற்பனை

டிக்கெட் விற்பனை

இதன் பிறகு எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியும் ஹைதராபாத்தில் நடைபெறாததால் அங்குள்ள ரசிகர்கள் பெரும் ஏக்கத்தில் இருந்தனர். இந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா டி20 போட்டி ஹைதராபாத்தில் நடக்கிறது என்று தெரிந்தவுடன் அங்குள்ள ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.இந்த நிலையில் போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதிகாலை 3 மணி

அதிகாலை 3 மணி

இதனை அடுத்து அதிகாலை 3 மணியில் இருந்து ஏராளமான ரசிகர்கள் தூங்காமல் மைதானத்திற்கு முன் குவிந்தனர். நேரம் ஆக, ஆக கூட்டம் அலைமோதியது. இதனால் செய்வது அறியாமல் திணறிய காவல்துறை கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் நிறுத்தியது.ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போக போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

போலீசார் தடியடி

போலீசார் தடியடி

போலீசாரின் இந்த நடவடிக்கையால் அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. டிக்கெட் விற்பனை பெரும்பாலும் ஆன்லைனில் கொடுக்கப்படும் இந்த காலகட்டத்தில் மைதானத்திற்கு வந்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளுங்கள் என ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் அறிவித்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கண்டனம்

இந்த நிலையில் கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது. போட்டியை காண வந்தவர்களை இப்படியா நடத்துவது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிசிசிஐ முறையான ஏற்பாடு செய்யாததே இதுபோன்ற பிரச்சனைகளுக்கு காரணம் இன்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டு களிக்கும் அளவிற்கு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, September 22, 2022, 16:52 [IST]
Other articles published on Sep 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+