Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பார்த்து.. கொஞ்சம் மெல்லமா ! விராட் கோலியை பார்த்து பயந்து பேசிய டுபிளஸிஸ்.. வீடியோவை பாருங்க

பெங்களூரு : ஐபிஎல் தொடரின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மற்றொரு போட்டி என்றால் அது பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதும் ஆட்டம் தான். இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரு அணியில் சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இல்லாதது, பெரும் பின்னடைவ ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரஜத் பட்டிதார், மேக்ஸ்வெல் மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் முதல் போட்டியில் காயம் காரணமாக விளையாடமாட்டார்கள் என தெரிகிறது.

இதே போன்று பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டர் ஹசரங்காவும் முதல் போட்டியில் களமிறங்கவில்லை. மும்பை அணியை பொறுத்தவரையும் பும்ரா, ஜேசன் பெகுரண்டாப் ஆகியோர் விளையாடவில்லை.

இதனிடையே , 3 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூருவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனால் முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்று பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உள்ளார். இதற்காக நேற்று வலைப் பயிற்சியில் விராட் கோலி பேய் ஆட்டம் ஆடினார்.

வீசப்பட்ட பந்துகள் அனைத்தையும் கோலி சிக்சருக்கு பறக்கவிட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்த டுபிளஸிஸ், கோலி அடிப்பதை பார்த்து பயந்து பயந்து பேசினார். ஒரு சமயம் கோலி அடித்த பந்து அப்படியே அவர் தலைக்கு மேல் சென்றது, இது எங்கே தலையில் விழுந்து விடுமோ என்ற காரணத்தால் , ஒரு நொடி பேச்சை நிறுத்தி கொண்டார்.

Watch the video RCB Captain faf duplessis frieghtened of virat kohli shots

பின்னர் தொடர்ந்து பேசிய டுபிளஸிஸ் எங்களுக்கு கிடைத்த வீரர்களை நான் ஆசீர்வதமாக கருதுகறேன். இம்முறை கோப்பையை வெல்ல போராடுவோம். அதிரடியாகவும், சூழலுக்கு தகுந்த மாதிரி விளையாடுவோம். சில வீரர்கள் உடல் தகுதியுடன் இல்லை என்றாலும், பல இளம் வீரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

Story first published: Saturday, April 1, 2023, 15:27 [IST]
Other articles published on Apr 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+