பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்று கிரிக்கெட் உலகில் இரண்டு துருவங்கள் ஒன்றாக சந்தித்துக் கொண்ட சூழல் உருவாகியது. பெங்களூருவில் இன்று டெல்லி அணியும் ஆர் சி பி அணியும் பல பரிட்சை நடத்தியது. இதில் டெல்லி அணியின் மென்டராக கங்குலி பணியாற்றுகிறார்.
இதற்காக கங்குலி டெல்லி அணியுடன் பயணித்து வருகிறார். பிசிசிஐ தலைவராக கங்குலி இருந்த போது விராட் கோலி கேப்டன்ஷிப் பதவியில் இருந்து அவர் நீக்கி விட்டதாக விமர்சனங்கள் எழுந்தது. மேலும் தமக்கு மறைமுக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக விராட் கோலியும் குற்றச்சாட்டி இருந்தார்.

இதனால் இருவருக்கும் இடையே பெரும் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் ஐபிஎல் போட்டியில் இருவரும் சந்தித்துக் கொள்ளும் சூழல் உருவானது. போட்டி முடிந்த பிறகு டெல்லி அணியினரும் ஆர்சிபி அணியினரும் ஒருவருக்கொருவர் கை கொடுத்தனர். அப்போது பாண்டிங் விராட் கோலிக்கு கை கொடுத்துக் கொண்டு இருந்தார்.
அதன் பிறகு கங்குலியை பார்க்காமல் விராட் கோலி சென்றுவிட்டார். இதனை எதிர்பார்க்காத கங்குலியும் தாம் அவமானப்பட்டது வெளியே தெரியாத வகையில் அவரும் விலகி மற்ற வீரர்களுக்கு சென்று கை கொடுத்தார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி வென்றார்.
Virat kohli Ignore Ganguly not even handshake .its call karma ganguly never mess with king kohli👍👍👍 pic.twitter.com/IeHjmvI32S
— Radhe krishna🇮🇳 (@king_Virat140) April 15, 2023
இது குறித்து பேசிய அவர் இன்று நான் ஆட்டம் இழந்த முறை எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. நான் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தேன். ஆனால் புல்டாஸ் பந்தில் நான் ஆட்டம் இழந்து விட்டேன். இன்னிங்ஸ் இடையிலேயே 175 ரன்கள் இந்த ஆடுகளத்தில் போதுமானது என்று நான் கூறினேன்.
நான் நன்றாக பார்மில் இருக்கும்போது நல்ல பந்துகளை கூட பவுண்டரிக்கு விரட்டுவேன். அப்படி செய்யும்போது அது பந்துவீச்சாளர்களுக்கு கடும் அழுத்தத்தை கொடுக்கும். நாங்கள் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவினோம். தற்போது வெற்றி பாதைக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று விராட் கோலி கூறினார்.