Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'யார் இடத்துல வந்து யார் சீன் போடறது..' திடீரென ஆக்ரோஷமான சாஹல்.. தெறிக்கவிடும் வைரல் வீடியோ

துபாய்: நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இஷான் கிஷன் விக்கெட்டை அடுத்த சாஹல், அவரை வெறுப்பேற்றும் வகையில் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் இப்போது ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடைபெற்றது.

நேற்று மாலை சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டி கடைசி பந்து வரை சென்றது. அதில் சிஎஸ்கே 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

பெங்களூரு vs மும்பை

பெங்களூரு vs மும்பை

அதைத் தொடர்ந்து நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூரூ மற்றும் மும்பை அணிகள் மோதின. துபாயில் மையத்தானதில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பெங்களூரு அணிக்கு இதில் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரரான தேவ்தத் படிக்கல், 2ஆவது ஓவரிலேயே பும்ரா பந்து வீச்சில் டக் அவுட் ஆனார். அதன் பிறகு கோலியும் ஸ்ரீகர் பரத் அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். பாட்ரனர்ஷிப் நன்றாக வந்து கொண்டிருந்த போது ஸ்ரீகர் பரத் 32 ரன்களில் ஓவரில் வெளியேறினார். அரைசதம் அடித்திருந்த கோலி 52 ரன்களில் மில்னே பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சிறப்பான தொடக்கம்

சிறப்பான தொடக்கம்

அடுத்து வந்த ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் ஷாபாஸ் அகமது ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். ஒருபுறம் விக்கெட் விழுந்து வந்தாலும், மறுபுறம் மெக்ஸ்வேல் காட்டிய அதிரடியில் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் எடுத்தது. பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித் சர்மா டி காக் இணை மிகச் சிறந்த தொடக்கத்தை அமைத்துத் தந்தனர்.

சரிந்த மும்பை

சரிந்த மும்பை

பவர் ப்ளே முடிவில் 6 ஓவர்களில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்திருந்ததது. ஆனால், அதன் பிறகு மும்பை அணிக்குத் தொடங்கியது ஏழரை. பெங்களூரு அணிக்காக ஏழாவது ஓவரை சாஹல் இந்த பாட்னர்ஷிப்பை முடிவுக்குக் கொண்டு வந்தார். அந்த ஓவரின் 4ஆம் பந்தில் மெக்ஸ்வெலிடம் கேட்ச் கொடுத்து டி காக் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த ரோஹித் சர்மா 10ஆவது ஓவரில் இறுதி பந்தில் படிக்கலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பின்னர் சீட்டு கட்டை போல மும்பை அணி சரியத் தொடங்கியது.

இஷான் கிஷன் அவுட்

இஷான் கிஷன் அவுட்

மும்பை அணி வீரர்கள் களத்திற்கு வந்த வேகத்தில் மீண்டும் பெவிலியன் திரும்பி வந்தனர். அப்போது 11ஆவது ஓவரை சாஹல் வீசினார். அந்த ஓவரில் மூன்றாவது பந்தை இஷான் கிஷன் இறங்கி வந்து, லேக் திசையில் தூக்கியடிக்க முயன்றார். ஆனால் பந்து எட்ஜ் ஆகி ஹர்ஷல் பட்டேலுக்கு ஈசியான கேட்ச் ஆகச் சென்றது. தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இஷான் கிஷன் இந்த போட்டியிலும் 12 பந்துகளில் 9 ரன்களை மட்டுமே எடுத்தார்.

ஆக்ரோஷமான சாஹல்

ஆக்ரோஷமான சாஹல்

ஆனால், வழக்கமாக விக்கெட் எடுத்தாலும் கூட அமைதியாகக் கொண்டாடும் சாஹல் இந்த முறை ஆவேசமானார். இஷான் கிஷன் ஆவுட் ஆனதும், அவர் அருகே சென்ற சாஹல், அவரை வெறுப்பேற்றும் வகையிலே ஏதோ கூறுகிறார். அதைக்கேட்டுக் கடுப்பானாலும், இஷான் கிஷன் அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாக பெவிலியன் திரும்பிவிட்டார். ஆட்டத்தின் முதல் பாதியில் சாஹலை வெறுப்பேற்றும் வகையில் இஷான் கிஷன் நடந்து கொண்டிருப்பார். அதற்குப் பதிலடியாகவே சாஹல் இப்படி நடந்து கொண்டதாகப் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். திடீரென ஆக்ரோஷமான சாஹலில் இந்த வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகியுள்ளது. இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய சாஹல் வெறும் 11 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை சாய்த்தார்.

Story first published: Monday, September 27, 2021, 17:55 [IST]
Other articles published on Sep 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+