மோதி பாரு.. தாறுமாறு.. ஹைதராபாத்தை பறக்க விட்ட வாட்டே வாட்சன்.. எப்படி நடந்தது!
Recommended Video

சென்னை: சென்னை ஹைதராபாத் அணிகள் மோதும் இறுதிப்போட்டியில் சென்னை வீரர் வாட்சன் அதிரடியாக ஆடினார். இதில் 57 பந்தில் 100 ரன்கள் எடுத்து வாட்சன் சாதனை புரிந்துள்ளார்.
தற்போது சென்னை அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் இடையில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் தொடக்கத்தில் கொஞ்சம் திணறிய சென்னை பின் அதிரடியாக ஆடியது.
முதலில் டு பிளைசிஸை இழந்து திணறிய சென்னை தற்போது வாட்சன் ரெய்னா ஜோடியால் கலக்கி வருகிறது. முதலில் களமிறங்கிய ஹைதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட்டிற்கு 178 ரன்கள் எடுத்தது. தற்போது சென்னை எளிதாக இலக்கை அடைந்து வெற்றிபெற்றுள்ளது.

தொடக்கம் மோசம்
இந்த போட்டியில் முதலில் வாட்சன் மோசமாக திணறினார். முதல் பத்து பந்துகளில் ஒரு பந்தை கூட தொடவில்லை. அதிகபட்சம் ''டொக்'' வைத்து விளையாடிக்கொண்டு இருந்தார். முதல் 10 பந்திற்கு 0வில் இருந்த அவர்தான் பின் அதிரடியாக ஆடினார்.

வேகம்
முதல் ஐந்து ஓவர்களில் சென்னை மோசமாக ஆடிக்கொண்டு இருந்தது. ரன் ரேட் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் ஐந்து ஓவருக்கு பின் சென்னை விஸ்வரூபமெடுத்தது. முக்கியமாக சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், ஷாஹிப் அல்ஹஸன் ஓவர்களில் தெறிக்கவிட்டனர். ரெய்னாவும், வாட்சனும் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தனர்.

போட்டியை மாற்றிய ஓவர்
இதில் முக்கியமாக சந்தீப் சர்மா ஓவர் ஒன்றில் வாட்சன் வரிசையாக மூன்று சிக்ஸ் அடித்தார். அதன்பின் வரிசையாக பவுண்டரி மழையை பொழிய ஆரம்பித்தார். ஹைதராபாத் என்ன நடக்கிறது என்பதை கவனிக்கும் முன் போட்டியின் திசையையே வாட்சன் மாற்றி இருந்தார்.

கெத்து
கடைசியில் வாட்சன் மிகவும் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். 57 பந்தில் 117 ரன்கள் எடுத்து வாட்சன் கலக்கினார். இதில் 8 சிக்ஸ், 11 பவுண்டரி அடக்கம். சென்னை அணியை வாட்சன் எளிதாக வெற்றியை நோக்கி கொண்டுசென்றுள்ளார். சென்னைக்கு மூன்றாவது முறையாக கப் வாங்கி கொடுத்துள்ளார், இந்த ஆஸ்திரேலிய சிங்கம்.


Click it and Unblock the Notifications