Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மா "கவர்ன்மென்ட் பேங்க்" மாதிரி.. டிவிட்டரில் கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

மெல்போர்ன்: தென் ஆப்பிரிக்காவுடனான இன்றைய உலகக் கோப்பைப் போட்டியின்போது டக் அவுட் அன இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவை ரசிகர்கள் டிவிட்டரில் போட்டுத் தாளித்து விட்டனர்.

பாகிஸ்தானுடன் நடந்த முதல் போட்டியில் 20 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்திருந்தார் ரோஹித். இந்தப் போட்டியில் டக் அவுட் ஆகி விட்டார்.

ஒரு நாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் குவிப்பு (264), ஒரு நாள் போட்டியில் அதிக முறை இரட்டை சதம் போட்டது (2) என்ற சாதனையை வைத்துள்ள ரோஹித் சரியான பார்மில் இல்லாததால் ரசிகர்களின் கேலிக்குள்ளாகியுள்ளார்.

ரோஹித்தை கிண்டலடித்துப் போடப்பட்ட சில ட்விட்களைப் பார்க்கலாம்:

கவர்ன்மென்ட் பேங்க் மாதிரி

அனில் ஜூன் என்பவர் போட்டுள்ள டிவிட்டில், அரசு வங்கிகள் போல மாறி விட்டார் ரோஹித். ஞாயிற்றுக்கிழமையானால் விளையாட மாட்டேன் என்கிறார். பேசாமல் போட்டிகளை வார நாட்களுக்கு மாற்ற வேண்டும் என்று கிண்டலடித்துள்ளார்.

ஆர்டிஐயை வைத்து திறமையைக் கண்டறிக

ராஜன் பிடி என்பவர் விடுத்துள்ள டிவிட்டில், ஆர்டிஐயை வைத்து டைம் பாஸ் செய்ய இதோ இன்னொரு நல்ல வாய்ப்பு. ரோஹித் சர்மாவிடம் உண்மையிலேயே திறமை உள்ளதா என்பதை ஆர்டிஐ மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஜூகல் படேல் இது ரெம்ப ஓவர்!

ஜுகல் படேல் என்பவர் ரோஹித் சர்மா பேக்கில் தலை வைத்துத் தூங்குவதைப் போன்ற படத்தைப் போட்டு கிண்லடித்துள்ளார்.

ரோஹித்தா.. ராகுலா

ராகுல் கார்க் என்பவர் விடுத்துள்ள டிவிட்டில், கடைசியாக ராகுல் காந்தி மாதிரி ஆகி விட்டார் ரோஹித் சர்மா என்று விமர்சித்துள்ளார்.

கிரண் பேடியை வச்சு

குனால் கண்ணாவின் டிவிட் இது... கிரண்பேடி டூ ரோஹித் சர்மா: ரிலாக்ஸ், அவுட் என்று நீங்கள் நினைக்கும் வரைக்கும் நீங்க அவுட்டே கிடையாது.

ரிவால்வர் ராணி.. என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா!

ரிவால்வர் ராணியின் கிண்டல்தான் உச்சமானது. காந்தி மைக்ரோஸ்கோப்பைப் பார்க்கும் படத்தைப் போட்டு, ரோஹித் சர்மாவின் திறமை எங்கே என்று காந்தி ஆராய்ந்து கொண்டிருப்பதாக கிண்டலடித்துள்ளார்.

விடுங்கப்பா.. மத்தவங்க ஆடியதை கொண்டாடுங்க.. அடுத்த மேட்ச்ல ரோஹித் சதமடிப்பார்.. கவலைப்படாதீங்க!

Story first published: Sunday, February 22, 2015, 14:58 [IST]
Other articles published on Feb 22, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+