Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பை காலிறுதிப் போட்டி-பாக்.கிடம் 112 ரன்களில் சுருண்டது மே. இ. தீவுகள்

மிர்பூர் உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் காலிறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 112 ரன்களில் பரிதாபமாக சுருண்டு போனது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

Shahid Afridi and Darren Sammy

உலககக் கோப்பைக் கிரிக்கெட்டின் காலிறுதிப் போட்டிகள் இன்று தொடங்கின. முதல் போட்டி வங்கதேசத்தின் மிர்பூர் நகரில் இன்று நடந்தது.

இதில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், பாகிஸ்தானும் சந்தித்தன. நாக் அவுட் போட்டி என்பதால் இரு அணிகளும் வெற்றிக்கு மும்முரமாக இருந்தன. ஆனால் பாகிஸ்தான் அணியின் அபாரமான பந்து வீச்சில் சிக்கி மேற்கு இந்தியத் தீவுகள் சுருண்டு போய் விட்டது.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. ஆனால் அதன் பேட்ஸ்மென்கள் அணியைக் கைவிட்டு விட்டனர்.

ஸ்மித் 7 ரன்களிலும், கெய்ல் 8 ரன்களிலும் வீழ்ந்தனர். ராம் நரேஷ் சர்வான் கடும் கட்டையைப் போட்டு 25 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பிரேவோ டக் அவுட் ஆகி மேற்கு இந்தியத் தீவுகளின் நிலையை மேலும் மோசமாக்கினார்.

ஷிவ்நரைன் சந்தர்பால் மட்டுமே சற்று நிதானித்து ஆடி அணியை காப்பாற்ற கடுமையாக முயன்றார். ஆனால் அவராலும் முடியவில்லை. கடுமையாக போராடி 44 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் சந்தர்பால். அத்தோடு மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் மூச்சும் நின்று போனது.

மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் அதிகபட்சமாக சந்தர்பால்தான் 44 ரன்களை எடுத்தார். கடைசி வரிசையில் பந்து வீச்சாளர் கெமரூச் கூட சற்று விளையாட முயன்றார், ஆனால் முன்னணி வீரர்கள் மளமளவென அவுட் ஆனது மேற்கு இந்தியத் தீவுகள் அணியை கடும் பாதகத்திற்கு ஆளாக்கி விட்டது.

ஒரு கட்டத்தில் 100 ரன்களை எடுப்பதற்குள் 8 பேரை இழந்து தவித்துக் கொண்டிருந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. 100 ரன்களாவது எடுக்குமா என்ற நிலையும் இருந்தது. அதை கடுமையாக போராடி 100 ரன்களைத் தாண்ட உதவினார் சந்தர்பால்.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷாஹித் அப்ரிடி அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்களைச் சாய்த்தார். ஒவ்வொரு போட்டியிலும் அப்ரிடியின் ஆட்டம் பாகிஸ்தானை வெற்றிக்கு இட்டுச் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

சயீத் அஜ்மல், ஹபீஸ் ஆகியோரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 43.3 ஓவர்களிலேயே மேற்கு இந்தியத் தீவுகள் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்களில் சுருண்டு போனது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+