Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சன்ரைசர்சோட அடுத்த ரெண்டு போட்டிகளையும் வின் பண்ணனும்.. அதுதான் ஒரே லட்சியம்.. சாஹா

துபாய் : நேற்றைய ஐபிஎல்லின் 47வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய நிலையில், போட்டியில் விரித்திமான் சாஹா சிறப்பாக விளையாடினார்.

45 பந்துகளில் சாஹா அடித்த 87 ரன்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணியின் அடுத்த இரண்டு போட்டிகளை வெற்றி கொள்வதே தற்போதைய லட்சியம் என்று சாஹா தெரிவித்துள்ளார்.

We are looking forward to winning last two matches for SRH -says Wriddhiman Saha

ஐபிஎல்லின் 47வது போட்டியில் நேற்றைய தினம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் சார்பில் விளையாடிய டேவிட் வார்னர் மற்றும் விரித்திமான் சாஹா ஆகியோர் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மேலும் 45 பந்துகளில் 87 ரன்களை சாஹா குவித்தது அணியின் வெற்றியை சாத்தியப்படுத்தியது.

இந்நிலையில், இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக கிடைத்த சான்சை தான் சிறப்பாக பயன்படுத்தியதாகவும் முதலில் தடுமாற்றம் இருந்தாலும் தொடர்ந்து சரியாக விளையாடியதாகவும் சாஹா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ள சாஹா, அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, October 28, 2020, 11:47 [IST]
Other articles published on Oct 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+