For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்க கிளப் கிரிக்கெட் ஆடல.. ஐபிஎல் ஆடுறோம்.. அம்பயர்கள் மீது பாய்ந்த கோலி

Recommended Video

IPL 2019: Malinga No ball | பொங்கிய கோஹ்லி.. வருத்தம் தெரிவித்த ரோஹித்- வீடியோ

பெங்களூரு:நாங்க கிளப் கிரிக்கெட் ஆடல.. ஐபிஎல் ஆடுறோம் என்று அம்பயர்கள் மீது கோபத்தை கொட்டி உள்ளார் பெங்களூரு கேப்டன் விராத் கோலி.

பெங்களூரு, மும்பை அணிகள் மோதிய போட்டி நேற்று பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.

பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர் டி காக் 23 ரன்களில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் 33 பந்துகளில் 48 ரன்களை எடுத்தார்.

SRH vs RR:முதல் ஆட்டத்தில் தோல்வி... இன்று வெற்றி கணக்கை துவங்குவது யார்?SRH vs RR:முதல் ஆட்டத்தில் தோல்வி... இன்று வெற்றி கணக்கை துவங்குவது யார்?

187 ரன்கள் குவிப்பு

187 ரன்கள் குவிப்பு

சூர்யகுமார் யாதவ் 38 ரன்களில் வெளியேற, கடைசிவரை ஆட்டமிழக்காத ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்திருந்தது.

தொடக்க வீரர்கள் அவுட்

தொடக்க வீரர்கள் அவுட்

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் மொயின் அலி 13 ரன்கள் மட்டும் எடுத்தார். மற்றொரு வீரர் பார்த்திவ் படேல் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி 32 பந்துகளில் 46 ரன்களில் அவுட்டானார்.

70 ரன்கள் எடுத்தார்

70 ரன்கள் எடுத்தார்

அதிரடியாக ஆடிய டி வில்லியர்ஸ் 6 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 41 பந்துகளில் 70 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம், பெங்களூரு அணியின் டி வில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் 4000 ரன்களை கடந்தார்.

மும்பை வெற்றி

மும்பை வெற்றி

ஆனால்.. 20 ஓவர்களில் பெங்களூரு அணி, 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களையே எடுத்தது. இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவுசெய்தது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை அணி பந்து வீச்சாளர் பும்ரா, ஆட்ட நாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.

வெற்றி கிடைத்தது

வெற்றி கிடைத்தது

பெங்களூரு அணி வெற்றி பெற கடைசி பந்தில் 7 ரன்கள் தேவை என்று இருந்தது. அப்போது ரன் ஏதும் எடுக்காததால் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ரீப்ளேவில் பார்த்த போது மலிங்கா வீசிய கடைசி பந்து நோ பால் என்பது தெரியவந்தது.

கோலி அதிருப்தி

கோலி அதிருப்தி

அந்த நோபால் தான் பெங்களூரு அணியின் வெற்றியை பறித்துவிட்டது. நோபாலை ஆடுகள நடுவர் கவனிக்காததால் கோலி கடும் அதிருப்தி அடைந்தார். முடிவை மாற்றி அறிவிக்க கோரி நடுவர்களிடம் முறையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கவனக்குறைவான செயல்

கவனக்குறைவான செயல்

பின்னர் இது குறித்து அவர் பேசியதாவது: "நாங்க கிளப் போட்டி ஆடல, ஐபிஎல் போட்டியில் ஆடுகிறோம். இதுபோன்ற கவனக்குறைவாக செயல்களுக்கு அம்பயர்கள் செய்ய இடம் கொடுக்க கூடாது.

எதுவும் நடக்கலாம்

எதுவும் நடக்கலாம்

பேட்டிங் செய்ய டி வில்லியர்ஸ் களத்தில் இருந்த போது என்ன வேணுமென்றாலும் நடக்கலாம். எங்கள் அணியினர் சிறப்பாக செயல்பட்டார்கள் என்றார்.

Story first published: Friday, March 29, 2019, 11:03 [IST]
Other articles published on Mar 29, 2019
English summary
We are playing at ipl level, not club cricket says virat kohli fumes after no ball goes unspotted.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X