Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்களே பாருங்க.. யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஸ்பெஷலான இன்னிங்ஸை ஆடுவார்.. எதிர்பார்ப்பில் அஸ்வின்!

டோமினிக்கா: இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் இருந்து ஸ்பெஷலான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என்று நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அஸ்வின் மற்றும் ஜடேஜா சுழலை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 33ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 16ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

We Can see some special performance from Yashasvi Jaiswal says Ravichandran Ashwin

அதேபோல் இந்திய அணிக்காக அறிமுகமாகியுள்ள இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் முதல் நாளிலேயே சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். முதல் சில ஓவர்களில் யஷஸ்வி ஜெய்ஷ்வாலின் முகத்தில் பிரஷர் இருந்தது அப்பட்டமாக வெளியில் தெரிந்தாலும், சில பவுண்டரிகளை விளாசிய பின் சாதாரணமாக ரன்கள் சேர்க்க தொடங்கினார். இதனால் யஷஸ்வி ஜெய்வாலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இரு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அஸ்வின், அவர் பற்றி சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் துடிப்பான வீரராக இருக்கிறார். ஒரு இடதுகை பேட்ஸ்மேனாக அபாரமான திறமை அவரிடம் இருக்கிறது. நிச்சயம் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய சாதனைகளை படைப்பார் என்று நினைக்கிறேன். அதேபோல் இந்தப் போட்டியில் ஸ்பெஷலான இன்னிங்ஸை விளையாடுவார் என்று நினைக்கிறேன் என்று எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.

தொடர்ந்து பிட்ச் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், சிறப்பாக பந்துவீசி இருக்கிறோம் என்று நினைக்கிறேன். 10 ஓவர்களுக்கு பின் நன்றாக பிட்ச் ஸ்பின்னுக்கு ஒத்துழைத்தது. நான் சில வீடியோக்களை பார்க்கும் போது, நேரம் கடந்த போது பந்து சிறப்பாக ஸ்பின்னாகியது. ஆனால் நாங்கள் ஆடுகளத்திற்கு ஏற்ப முன்னதாக மாறிக் கொண்டோம். சர்வதேச கிரிக்கெட் என்பதே சூழலுக்கும், ஆடுகளத்திற்கும் ஏற்ப மாற்றிக் கொள்வது தான். அதனால் எனக்கு பெரிய பிரச்சனை இல்லை என்று தெரிவித்தார்.

Story first published: Thursday, July 13, 2023, 9:39 [IST]
Other articles published on Jul 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+