For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாராலயும் அடிச்சுக்க முடியாது... அடிச்சுக்க முடியாது... சிஎஸ்கே பத்தி சொல்லியிருக்காரு ஹஸ்ஸி

மும்பை : ஐபிஎல் 2021 சீசன் துவங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் சிறப்பாக தயாராகி வருகின்றன.

தனது முதல் போட்டியை மும்பையில் வரும் 10ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ள சிஎஸ்கேவும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து ஏரியாக்களிலும் சிஎஸ்கே சிறப்பாக உள்ளதாக அணியின் பேட்டிங் கோச் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

சிறப்பான சிஎஸ்கே

சிறப்பான சிஎஸ்கே

ஐபிஎல் 2021 தொடருக்காக 8 ஐபிஎல் அணிகளும் ஜரூராக தயாராகி வருகின்றன. தாங்கள் விளையாடவுள்ள முதல் போட்டிகளின் தளங்களில் தங்களது பயிற்சி போட்டிகளை மாற்றி தங்களை சிறப்பாக தயார் படுத்தி வருகின்றன. இந்நிலையில் சிஎஸ்கேவும் தனது பயிற்சிகளை மும்பையில் செய்து வருகிறது.

கேள்விக்குள்ளான பௌலிங் ஆர்டர்

கேள்விக்குள்ளான பௌலிங் ஆர்டர்

அந்த அணியின் பௌலர் ஹாசல்வுட் சமீபத்தில் அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், அணியின் பௌலிங் ஆர்டர் குறித்த விமர்சனங்கள் மற்றும் கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றனர். அவருக்கு மாற்று வீரர் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

ஹஸ்ஸி பாராட்டு

ஹஸ்ஸி பாராட்டு

இந்நிலையில் அணி இந்த சீசனில் மிகவும் சிறப்பாக மற்றும் பேலன்சான அணியாக மாறியுள்ளதாக அணியின் பேட்டிங் கோச் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். மொயீன் அலி, ராபின் உத்தப்பா மற்றும் கௌதம் ஆகியோர் அணியின் சிறப்பான இணைப்பாக உள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வெற்றித் தீவிரம்

வெற்றித் தீவிரம்

சிஎஸ்கேவின் வலைதளத்தில் பேசியுள்ள அவர், அணியில் மிகவும் ஆழமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அணியின் வீரர்கள் வெற்றிக்கான தீவிரத்துடன் சிறப்பாக தயாராகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வான்கடே மைதானத்தின் நிலை மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் சிஎஸ்கே முதலில் ஆடப்படும் போட்டிகளில் வெற்றிகளை குவிப்பது நெருக்கடியை தவிர்க்க உதவும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நெருக்கடியை தவிர்க்கும்

நெருக்கடியை தவிர்க்கும்

முதலில் ஆடும் போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டால், அடுத்து ஆடப்படும் போட்டிகளில் ரிலாக்சாகவும் தன்னம்பிக்கையுடனும் சிஎஸ்கே வீரர்கள் விளையாட வாய்ப்பாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். இல்லையென்றால் அடுத்தடுத்த போட்டிகளில் வீரர்கள் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Sunday, April 4, 2021, 12:30 [IST]
Other articles published on Apr 4, 2021
English summary
A Good start would be nice because the players will then relax and hopefully play their best cricket with confidence -Hussey
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+