Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெஸ்ட் இண்டீஸிடம் ஈவு இரக்கமே காட்டக் கூடாது.. இஷாந்த் சர்மா ஆவேசம்!

கிங்ஸ்டன்: அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் மேற்கு இந்தியத் தீவுகளிடம் நாம் ஈவு இரக்கமே கூட்டாமல் கடுமையாக மோத வேண்டும் என்று வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கூறியுள்ளார்.

இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடியதாகவும், சிறந்த முறையில் இந்தியாவின் பந்து வீச்சு இருந்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார். இதேபோல அடுத்த 3 போட்டிகளிலும் நாம் சற்றும் தயங்காமல் இரக்கம் காட்டாமல் கடுமையாக மோத வேண்டும் என்றும் இஷாந்த் கூறியுள்ளார்.

ஆன்டிகுவாவில் நடந்த முதல் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை ஒரு இன்னிங்ஸ் 92 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இந்த நிலையில் அடுத்து வரும் போட்டிகளில் இந்தியாவின் நிலை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இஷாந்த் சர்மாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு இஷாந்த் அளித்த பதில்..

ஈவு இரக்கமே கூடாது

ஈவு இரக்கமே கூடாது

சற்றும் நாம் தளர்ந்து விடக் கூடாது. தொடர்ந்து ஈவு இரக்கமே இல்லாமல் அடுத்து வரும் போட்டிகளிலும் ஆட வேண்டும். பாசிட்டிவ் கிரி்க்கெட்டை ஆட வேண்டும். ஆட்டத்தின் தொடர்ச்சியில் நமது உத்திகளை வகுத்துக் கொள்ள முடியும்.

ஷார்ட் பிட்ச்சிலேயே பந்து வீசுங்க

ஷார்ட் பிட்ச்சிலேயே பந்து வீசுங்க

நாங்கள் போட்ட ஷார்ட் பிட்ச் பந்துகளைச் சமாளிக்க முடியாமல் மேற்கு இந்தியத் தீவுகள் வீரர்கள் திணறினர். அதே போல நாம் தொடர்ந்து வீச வேண்டும். ஆனால் பிட்ச்சையும் கவனத்தில் கொள்வது முக்கியம்.

திட்டமிட்டு அடிப்போம்

திட்டமிட்டு அடிப்போம்

திட்டமிட்டு முதல் போட்டியில் நாம் விளையாடினோம். எனவே தெளிவாக வென்றோம். அதேபோல அடுத்து வரும் போட்டிகளிலும் சரியான திட்டமிடல் அவசியம்.

உமேஷ் - சமி - அஸ்வின் - மிஸ்ரா சூப்பர்

உமேஷ் - சமி - அஸ்வின் - மிஸ்ரா சூப்பர்

உமேஷ் யாதவும், முகம்மது சமியும் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசினர். அடுத்து 2வது இன்னிங்ஸில் அஸ்வினும், அமித் மிஸ்ராவும் சிறப்பாக செயல்பட்டனர்.

எனக்கு ஒரு விக்கெட்தான் பரவாயில்லை

எனக்கு ஒரு விக்கெட்தான் பரவாயில்லை

எனக்கு இப்போட்டியில் ஒரு விக்கெட்தான் கிடைத்தது. ஆனால் பரவாயில்லை. அடுத்து வரும் போட்டிகளில் எனக்கு நிறைய கிடைக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் இஷாந்த் சர்மா.

Story first published: Friday, July 29, 2016, 11:05 [IST]
Other articles published on Jul 29, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+