Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்.. 8 உங்க நாட்லதான் இருக்காங்க.. அவங்க பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? பதறியடித்த நியூசி. டீம்!

டெல்லி : ஐபிஎல் 2021 தொடரில் கணிசமான அளவில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடவுள்ளனர்.

நியூசிலாந்தை சேர்ந்த கேன் வில்லியம்சன் உள்ளிட்ட 8 வீரர்கள் இந்த சீசனில் விளையாடுவதற்காக தயாராக உள்ளனர்.

இந்நிலையில் இந்திய பயணிகளுக்கு தடை விதித்து நியூசிலாந்து பிரதமர் அறிவித்துள்ளது வீரர்களின் இருப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

கோலாகல துவக்கம்

கோலாகல துவக்கம்

ஐபிஎல் 2021 தொடர் இன்று முதல் துவங்கவுள்ள நிலையில், கொரோனா பரவல் அனைத்து தரப்பினரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாகவே கடந்த சீசனை யூஏஇயில் நடத்தி முடித்த பிசிசிஐ தற்போது இந்தியாவின் சென்னை, மும்பை உள்ளிட்ட 6 இடங்களில் நடத்தவுள்ளது.

இடத்தை மாற்ற பிசிசிஐ மறுப்பு

இடத்தை மாற்ற பிசிசிஐ மறுப்பு

குறிப்பாக மும்பையில் கொரேனா வைரஸ் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஆயினும் இடத்தை மாற்றும் முடிவு எடுக்கப்படாது என்றும் பாதுகாப்பான வகையில் போட்டிகள் நடத்தப்படும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில் மற்ற சீசன்களை போலவே ஐபிஎல் 2021 தொடரிலும் கணிசமான அளவில் வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அதிரடி

நியூசிலாந்து அதிரடி

கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில் இந்திய பயணிகள் நியூசிலாந்துக்கு வர இரு வாரங்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஜெசிண்டா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். நியூசிலாந்து குடிமக்களாகவே இருந்தாலும் இந்தியாவிலிருந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

8 நியூசிலாந்து வீரர்கள்

8 நியூசிலாந்து வீரர்கள்

இந்நிலையில் இந்தியாவின் ஐபிஎல்லில் 8 நியூசிலாந்து வீரர்கள் உள்ளதாகவும் அவர்களின் பாதுகாப்புக்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமே பொறுப்பு என்றும் ஜெசிண்டா மேலும் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போதைய சூழல் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக நயூசிலாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

28ம் தேதி வரை தடை

28ம் தேதி வரை தடை

இந்திய ஐபிஎல் 2021 தொடரில் கேன் வில்லியம்சன், ட்ரெண்ட் போல்ட், மிட்செல் சான்ட்னர், கைல் ஜாமீசன், ஜிம்மி நீசம், டிம் செய்பர்ட், ஆடம் மில்னே மற்றும் லாக்கி பெர்குசன் ஆகிய 8 நியூசிலாந்து வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தற்போது இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இவர்கள் வரும் 28ம் தேதிவரை நினைத்தாலும் நியூசிலாதுக்கு திரும்ப முடியாது.

Story first published: Friday, April 9, 2021, 16:06 [IST]
Other articles published on Apr 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+