
ஜடேஜாவிற்கு காயம்
ஆஸ்திரேலிய தொடரின் இடையில் இடது கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார் ரவீந்திர ஜடேஜா. தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு. கடந்த இரு மாதங்களாக தன்னுடைய பிட்னசை நிரூபிக்கும் வகையில் என்சிஏவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி
இடையில் அவ்வப்போது அவர் பயிற்சிகளில் ஈடுபடும் புகைப்படங்களும் வெளியானவண்ணம் உள்ளது. ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கவுள்ளது. இதையொட்டி கடந்த சில தினங்களாக சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி உள்ளிட்டோர் சென்னையில் பயிற்சி மேற்கொண்டனர்.

மும்பைக்கு மாற்றம்
தொடர்ந்து மும்பைக்கு அந்த அணி தனது பயற்சி முகாமை வரும் 26ம் தேதி முதல் மாற்றவுள்ளது. இதையொட்டி ரெய்னா புஜாரா, பயிற்சியாளர் பிளமிங் உள்ளிட்டோர் மும்பைக்கு தங்களது பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் வரும் 27 -28 தேதிகளில் அணியின் பயிற்சி முகாம் மும்பையில் துவங்கவுள்ளதாக விஸ்வநாதன் கூறியுள்ளார்.

ஜடேஜா குறித்து தெளிவு இல்லை
ஜடேஜா எப்போது அணியில் இணைவார் என்பது குறித்து எந்த ஐடியாவும் இல்லை என்று அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய பிட்னஸ் சோதனையில் தேர்ந்து என்சிஏவால் முதலில் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது தற்போதைய நிலை குறித்து எந்த தெளிவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிஎஸ்கே கவலை
ஒவ்வொரு அணியிலும் முதல் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென்றால் அந்த அணியில் அணிவீரர்கள் வரும் ஏப்ரல் 2ம் தேதிக்குள் இணைந்து குவாரன்டைன் உள்ளிட்டவற்றில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இநிலையில், ஜடேஜா குறித்து என்சிஏ எதுவும் கூறாமல் இருந்து சிஎஸ்கேவை கவலை கொள்ள வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











