Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடினமான நேரத்துல எல்லாம் சிறப்பா நம்பள வெளிப்படுத்தியிருக்கோம்... ரோகித் சர்மா பாராட்டு

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரை 3க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. வரும் ஜூன் மாதம் நியூசிலாந்துடன் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் இறுதிப்போட்டிக்கு தேர்வானது குறித்து இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா அபார வெற்றி

இந்தியா அபார வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் 3க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் மோதவுள்ளது.

சிறப்பான ரோகித் சர்மா

சிறப்பான ரோகித் சர்மா

இங்கிலாந்துடனான இந்த தொடரில் துவக்க வீரர் ரோகித் சர்மா தனது சிறப்பான ஆட்டங்களை அளித்துள்ளார். கடந்த 4வது போட்டியிலும் 49 ரன்களை அடித்து அணியின் வெற்றிக்கு தானும் ஒரு காரணமாக அமைந்தார். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளதற்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு பாராட்டு

இந்திய அணிக்கு பாராட்டு

இந்திய அணி மற்றும் அதன் ஊழியர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை சாத்தியப்படுத்தியுள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடந்துள்ள டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து சிறப்பாக விளையாடியதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

சிறப்பாக எதிர்கொண்ட இந்தியா

சிறப்பாக எதிர்கொண்ட இந்தியா

மேலும் கடினமான சூழல்களை இந்திய அணி இந்த காலத்தில் கடந்து வந்துள்ளதாகவும் அதை சிறப்பாக எதிர்கொண்டதாகவும் இவையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற முக்கிய காரணம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இது ஒரு நீண்ட பயணம் என்றும் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, March 8, 2021, 11:32 [IST]
Other articles published on Mar 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+