உலக கோப்பையில் தல தோனி தான் இந்தியாவின் மாஸ்டர் கார்டு.. புகழ்ந்து தள்ளிய ஹிட்மேன்
மும்பை:உலக கோப்பையில் இந்திய அணியின் மாஸ்டர் கார்டு தோனி தான் என்று அதிரடி வீரர் ரோகித் சர்மா புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் அறிவித்துவிட்டன.
உலக கோப்பையில் விளையாட ஒவ்வொரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணி 15 பேர் கொண்ட பட்டியலை அறிவித்த போது, அம்பத்தி ராயுடு மற்றும் இளம் வீரர் ரிஷப் பன்ட் தேர்வு பெறாதது பெருத்த விவாதத்தை உருவாக்கியது.

பலரும் ஆதரவு
தேர்வுக்குழு மட்டுமல்லாது... பல முன்னாள் கேப்டன்களும் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் தேர்வு பெற்றதற்கு ஆதரவு தெரிவித்தனர். பல சர்ச்சைகள் ஏற்படுத்திய நிலையில் துணை கேப்டன் ரோகித் சர்மா தோனி பற்றி பல முக்கிய கருத்துகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

தோனியின் பங்கு
அவர் கூறியிருப்பதாவது:கோலி தலைமையிலான இந்திய அணியில் தோனியின் பங்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். தோனி விக்கெட் கீப்பிங் செய்து கொண்டே மைதானம் எப்படி உள்ளது, அதற்கு எந்த விதமான பந்து வீச்சை தேர்வு செய்ய வேண்டும் என ஆலோசனைகளை வழங்குவார்.

அறிவுரை இருக்கும்
இளம் வீரர்களை சிறப்பாக வழி நடத்தும் அந்த அழகே தனி. குல்தீப், சாஹல் போன்ற ஸ்பின்னர்களுக்கு களத்தில் தோனி அளிக்கும் அறிவுரை பெரிதும் உதவியாக இருக்கும்.

உறுதுணையாக இருப்போம்
உலக கோப்பையில் அவரின் பங்கு மிக முக்கியம். துணை கேப்டனாக விராட் கோலிக்கு நான் உறுதுணையாக இருக்க வேண்டும். கடந்த உலக கோப்பை போட்டியில் சச்சின், சேவாக் போன்ற வீரர்கள் தோனிக்கு பக்கபலமாக இருந்தனர். இந்தமுறை அந்த பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது என்று கூறினார்.


Click it and Unblock the Notifications