Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கையை காலை நீட்டி... விசித்திர காதல்... விசித்திர போஸ்.. புகைப்படம் வெளியிட்ட ரோகித்

மும்பை : இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, வழக்கம் போல தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

IPL 2020 ஐ விட்டு விலகியது VIVO... BCCI அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆனால் இந்த புகைப்படம் வழக்கமானது அல்ல. வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ரோகித் மற்றும் அவரது மனைவி ரித்திகா இருவரும் ஒரே மாதிரி போஸ் கொடுத்துள்ளனர்.

அந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரோகித் சர்மா, காதலில் உள்ள விசித்திரமானவர்கள் என்று கேப்ஷனுடன் இன்ஸ்டாவில் பதிந்துள்ளார்.

குடும்பத்தினருடன் பொழுதுபோக்கு

குடும்பத்தினருடன் பொழுதுபோக்கு

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரும் குறைந்த ஓவர்கள் போட்டியின் துணை கேப்டனுமான ரோகித் சர்மா, இந்த லாக் டவுன் சமயத்தில் தன்னுடைய மனைவி ரித்திகா மற்றும் மகள் சமைராவுடன் சிறப்பாக பொழுதை போக்கி வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவர் அவ்வப்போது வெளியிட்டுவரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் இதை அறியலாம்.

தொடர் வீடியோ பதிவு

தொடர் வீடியோ பதிவு

அடுத்த மாதம் 19ம் தேதி யூஏஇயில் துவங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்காக தன்னை தயார் படுத்திவரும் ரோகித் சர்மா, தன்னுடைய இன்ஸ்டா பதிவுகளை பகிரவும் தவறவில்லை. தொடர்ந்து பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதன்மூலம் தன்னுடைய ரசிகர்களின் உற்சாகத்திற்கு உத்தரவாதம் அளித்து வருகிறார் ரோகித் சர்மா.

ஒரே மாதிரியான போஸ்

ஒரே மாதிரியான போஸ்

தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மனைவி ரித்திகா மற்றும் தான் வித்தியாசமான காலகட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வெளிப்படுத்தியுள்ள வித்தியாசமான போஸ் குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் ரோகித் மைதானத்தில் பயிற்சியின்போது கை கால்களை வித்தியாசமாக வைத்து போஸ் கொடுத்துள்ளார். அதேபோல தனது வீட்டில் ரித்திகா போஸ் கொடுத்துள்ளார்.

தோனி வேற மாதிரி

தோனி வேற மாதிரி

இந்திய அணியின் அடுத்த தோனி ரோகித் சர்மாதான் என்று சமீபத்தில் சுரேஷ் ரெய்னா தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த ரோகித் சர்மா, தங்கள் இருவரையும் கம்பேர் செய்ய வேண்டாம் என்றும், தோனி வேறு மாதிரி என்றும் கூறியிருந்தார். மேலும் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு திறமைகள் அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Story first published: Friday, August 7, 2020, 17:44 [IST]
Other articles published on Aug 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+