Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிக்சர் மட்டும் தான் அடிப்பேன்... ஓட சொல்லக் கூடாது!

பிரிட்ஜ்டவுன்: டி-20 கிரிக்கெட் போட்டிகளில், பந்தை சிக்சரும், பவுண்டரியுமாக அடித்து விளாசுவதுடன், அடிக்கடி, ஓடி, ஒன்று அல்லது இரண்டு ரன்களையும் சேர்க்க வேண்டும். ஆனால், ஓட முடியாது என்று அடம்பிடித்து, வெஸ்ட் இன்டீஸ் வீரர், மைதானத்தில் இருந்து வெளியேறிய சுவாரசியமான சம்பவம் நடந்தது.

வெஸ்ட் இன்டீஸில் கரீபியன் பிரீமியர் லீக் டி-20 போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் அணியும், செயின்ட்லூசியா ஸ்டார்ஸ் அணியும் மோதின.

முதலில் ஆடிய பார்படாஸ் அணி, 20 ஓவர்களில், 4 விக்கெட் இழப்புக்கு, 195 ரன்கள் எடுத்தது. டுவானே ஸ்மித், 103 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய செயின்ட்லூசியா அணியின் நட்சத்திர வீரர் ரஹீம் கார்ன்வால், அபாரமாக விளையாடிக் கொண்டிருந்தார்.

ஆறு சிக்சர்.. 7 பவுண்டரி

ஆறு சிக்சர்.. 7 பவுண்டரி

44 பந்துகளில், ஆறு சிக்சர், 7 பவுண்டரிகளுடன், 78 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி இரண்டு ஓவர்கள் இருக்கும்போது, திடீரென காயம் ஏற்பட்டதாகக் கூறி வெளியேறினார். ஆனால், உண்மையில், ரன் எடுக்க ஓட முடியாது என்பதற்காகவே அவர் வெளியேறினார்.

ஓட முடியலைய்யா

ஓட முடியலைய்யா

இந்த போட்டியில், 78 ரன்களுடன், 2 விகெட்களையும் வீழ்த்திய, அவருடைய இந்த முடிவு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், அவரைப் பார்த்தால், அவருடைய முடிவு சரி என்பது தெரிய வரும்.

செம வெயிட் பாஸ்!

செம வெயிட் பாஸ்!

உலகிலேயே, மிகவும் அதிக எடை கொண்ட கிரிக்கெட் வீரராக திகழும் கார்ன்வால், 6 அடி 5 அடி உயரத்துடன், 143 கிலோ எடையுடன், மிகப் பெரிய உருவத்துடன் இருப்பார், 24 வயதாகும் இவர், கடைசி நேரத்தில் எடுத்த முடிவால், அவருடைய அணி, 29 ரன்களில் தோற்றது.

யாருப்பா அது!

யாருப்பா அது!

யாருப்பா அது. எனக்கே பார்க்கணும் போல இருக்கு என்று தோன்றுகிறதா? இவர் இந்தியாவுக்கு எதிராகவும் விளையாடியுள்ளார்.

ஞாபகமில்லையா? இந்திய கிரி்க்கெட் அணி, 2016 ஜூலையில் வெஸ்ட் இன்டீஸ் சென்றது.

நம்மையே மிரட்டியவர்

நம்மையே மிரட்டியவர்

அப்போது, வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் வாரிய அணிக்காக விளையாடிய கார்ன்வால், அந்த அணியிலேயே அதிகபட்சமாக, 41 ரன்களை எடுத்தார். மேலும், 5 விக்கெட்களை வீழ்த்தினார். சாதாரணமாகவே, வெஸ்ட் இன்டீஸ் வீரர்களை பார்த்தாலே பயமாக இருக்கும். கார்ன்வெல்லை பார்த்தால், மிரண்டு போய்விடுவீர்கள்.

Story first published: Saturday, September 2, 2017, 16:56 [IST]
Other articles published on Sep 2, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+