Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. வெஸ்ட் இண்டீஸ் அணியில் மாமிச மலை.. வேகப்பந்துவீச்சும் சூப்பர்

பார்பிடாஸ் : இந்தியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

வரும் 12ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி டோமினிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் கிரிக்கெட்டில் மாமிச மலை என்று அழைக்கப்படும் ரஹீம் கார்ன்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

west indies 13 men team is announced for india test series

140 கிலோ எடை உள்ள ரஹீம் கார்ன்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக எடை கொண்ட வீரர் என்ற பெருமை பெற்றிருக்கிறார். பேட்டிங் மற்றும் சுழற் பந்துவீச்சில் கலக்கக்கூடிய ரஹீம் கார்ன்வாலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதேபோன்று சுழற் பந்துவீச்சாளர் வாரிக்க கணுக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் கிடைத்திருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கைல் மெயர்ஸ் மற்றும் ஜெய்டன் சேல்ஸ் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் இந்திய தொடரில் பங்கேற்கவில்லை. இதேபோன்று வேகபந்துவீச்சாளராக ஷான்னான் கேப்ரியல், அல்சாரி ஜோசப், கீமர்ரோச், ஜேசன் ஹோல்டர் என நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

west indies 13 men team is announced for india test series

இதேபோன்று 22 வயதான மெக்கன்சி என்ற வீரருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மெக்கன்ஸி வங்கதேசத்துக்கு எதிரான ஏ தொடரில் சிறப்பாக விளையாடி அசத்தியிருக்கிறார். மேலும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் 221 ரன்கள் அடித்து பட்டையை கிளப்பி இருக்கிறார். இதேபோன்று அதான்ஷி என்ற 24 வயது வீரருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் யுஏஇக்கு எதிராக அறிமுக போட்டியில் அதிவேக அரைசதம் அடித்துள்ளார். பிராத்வெயிட், பிளாக்வுட் தேஜ் நரைன் சந்தர்பால், ரேமன் ரேப்பர் போன்ற வீரர்களும் அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

மேலும் இந்த தொடரில் ராஸ்டன் சேஸ்க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கான காரணத்தையும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை தங்களது சொந்த மண்ணில் வீழ்த்திருக்கிறார்கள். இதனால் அவர்களை எளிதாக எண்ணிவிட முடியாது. வேகபந்து வீச்சும் பலமாக இருப்பதால் இந்திய வீரர்களுக்கு நிச்சயம் நெருக்கடி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Saturday, July 8, 2023, 12:27 [IST]
Other articles published on Jul 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+