Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு

போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான 4வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2-0 என தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இவ்விறு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ட்ரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயின், குயின்பார்க்கில் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

West Indies 62/2 before rain spoils opening day proceedings

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் அல்சாரி ஜோசப் நீக்கப்பட்டு தேவேந்திர பிஷூ சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் தவான், ஜடேஜா ஆகியோர் நீக்கப்பட்டு புஜாரா மற்றும் முரளி விஜய் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் அரை மணி நேரம் தாமதமாக துவங்கியது. மேற்கிந்திய தீவுகளின் ஜான்சன், கிரேக் பிராத்வைட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஜான்சன் (9) ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.

அடுத்த சில நிமிடங்களில் அஸ்வின் சுழலில் சிக்கிய டேரன் பிராவோ போல்டானார். இந்நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது பிராத்வையிட் 32 ரன்களுடனும், சாமுவேல்ஸ் 4 ரன்னிலும் அவு்ட்டாகாமல் களத்தில் உள்ளனர்.

Story first published: Friday, August 19, 2016, 2:22 [IST]
Other articles published on Aug 19, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+