Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியை வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் வியூகம்.. ODI தொடரில் சதமடித்த வீரருக்கு டி20 அணியில் வாய்ப்பு

லக்னோ: இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில், நட்சத்திர பேட்டர் அமீர் ஜாங்கூ கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் தொடரில் அமீர் ஜாங்கூ அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணிக்கு எதிராக 2-வது ஒருநாள் போட்டியில் சதமடித்த இவர், நியூ சண்டிகரில் நடைபெற்ற 3-வது போட்டியில் 352 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய போது 56 பந்துகளில் 67 ரன்கள் குவித்து அசத்தினார். இவர் முதலில் அறிவிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் இடம் பெறவில்லை.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3-வது ஒருநாள் போட்டியின் போது, நமன் திர் கொடுத்த கேட்ச்சை பிடிக்க முயன்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜூவல் ஆண்ட்ரூவின் விரலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஸ்கேன் பரிசோதனையில் எலும்பு முறிவு இல்லை என்பது உறுதியானாலும், அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு மாற்று விக்கெட் கீப்பராக அமீர் ஜாங்கூ டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

West Indies Adds In-Form Batter Amir Jangoo to T20 Squad for Series Against India as Injury Replacement

29 வயதான அமீர் ஜாங்கூ இதுவரை 7 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 163 ரன்கள் சேர்த்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் கூட 34 பந்துகளில் 57 ரன்கள் விளாசி தனது அதிரடி ஃபார்மை நிரூபித்தார்.

மீண்டும் இந்திய அணியில் நடராஜன், புவனேஸ்வர் குமார்.. ஹாங்காங் சிக்சஸ் தொடருக்கான அணி அறிவிப்பு

மீண்டும் இந்திய அணியில் நடராஜன், புவனேஸ்வர் குமார்.. ஹாங்காங் சிக்சஸ் தொடருக்கான அணி அறிவிப்பு

ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஏற்கனவே ஷிம்ரான் ஹெட்மயர், ரோவ்மன் பவல், ஷெர்பேன் ரூதர்போர்ட் போன்ற பலம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். தற்போது ஒருநாள் தொடரில் இந்தியப் பந்துவீச்சை துவம்சம் செய்த அமீர் ஜாங்கூவும் இணைந்துள்ளது இந்திய அணிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து விமர்சனம் உள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதற்கு மேலும் அழுத்தம் அளிக்கும் வகையில் ஜாங்கூவை அணியில் சேர்த்துள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி அக்டோபர் 6-ஆம் தேதி லக்னோவில் தொடங்குகிறது.

IND vs WI: தோல்விக்கு பின் இந்திய அணிக்கு விழுந்த அடுத்த அடி.. ஐசிசி விதித்த அதிரடி அபராதம்

Also Read

IND vs WI: தோல்விக்கு பின் இந்திய அணிக்கு விழுந்த அடுத்த அடி.. ஐசிசி விதித்த அதிரடி அபராதம்
Story first published: Monday, October 5, 2026, 14:40 [IST]
Other articles published on Oct 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+