Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பை தகுதிச்சுற்று.. போராடி தோல்வியடைந்த அமெரிக்கா.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த வெஸ்ட் இண்டீஸ்!

ஹராரே: 50 ஓவர் உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் நேபாளம் மற்றும் அமெரிக்கா அணிகளை வீழ்த்தி ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. இதில் நேபாளம் அணியை எதிர்த்து ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய நேபாளம் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் குஷால் பூர்டெல் 99 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது.

West Indies and Zimbabwe won their First match against USA and Nepal in the World Cup qualifiers

தொடக்க வீரர் ஜாய்லார்ட் 25 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த வெஸ்லி 32 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து இணைந்த கிரைக் எர்வின் மற்றும் சேன் வில்லியம்ஸ் கூட்டணி நேபாளம் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. கிரைன் எர்வின் சதம் விளாசி நிதானமாக ரன்கள் சேர்க்க, சேன் வில்லியம்ஸ் 70 பந்துகளில் சதம் விளாசி ஜிம்பாப்வே அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். ஜிம்பாப்வே அணி 44.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 291 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது.

அதேபோல் மற்றொரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து அமெரிக்கா அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 49.3 ஓவர்களில் 297 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதில் சார்லஸ் 66, கேப்டன் ஹோப் 54, ராஸ்டன் சேஸ் 55 மற்றும் ஜோலர் 56 ரன்களும் எடுத்தனர். அமெரிக்கா அணி தரப்பில் கைல் பிலிப், ஸ்டீவ் டெய்லர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து அமெரிக்கா அணி தரப்பில் களமிறங்கிய டெய்லர் 18 ரன்களிலும், கேப்டன் மோனான்க் படேல் 6 ரன்களிலும் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த வீரர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் அமெரிக்கா அணி 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இந்த நிலையில் களமிறங்கிய கஜானந்த் சிங் தனியாளாக போராடி சதம் விளாசினார்.

இருப்பினும் மற்ற வீரர்கள் கம்பெனி கொடுக்காததால் அமெரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 39 ரன்களில் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் உலகக்கோப்பைத் தகுதிச்சுற்றுக்கான புள்ளிப்பட்டியலில் முதல் 2 புள்ளிகளை ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பெற்றுள்ளன.

Story first published: Sunday, June 18, 2023, 21:50 [IST]
Other articles published on Jun 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+