For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி 20 போட்டியை விட மோசமாக விளையாடி பாக்..! பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ்.. 7 விக். வித்தியாசத்தில் வெற்றி

Recommended Video

World cup 2019: WI vs Pak | 105 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான்! மே.இந்திய தீவுகள் அபாரம்- வீடியோ

நாட்டிங்ஹாம்:அசத்தல் பந்துவீச்சில் 105 ரன்களில் பாகிஸ்தானை சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்களுக்கு இடையேயான உலக கோப்பை தொடரின் 2வது போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பந்து வீச தீர்மானித்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் பேட்டிங் செய்தது.

பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களி வெறும் 105 ரன்கள் மட்டுமே எடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள், பாபர் அசாம் மற்றும் ஃபாகர் ஜமான் 22 ரன்களை எடுத்தனர்.

இப்படியா மிரண்டு போய் ஆடுவாங்க? பேட்டிங் பிட்ச்ல கூட ஒழுங்கா ஆட முடியாதா? பொங்கிய பாக். ரசிகர்கள்!! இப்படியா மிரண்டு போய் ஆடுவாங்க? பேட்டிங் பிட்ச்ல கூட ஒழுங்கா ஆட முடியாதா? பொங்கிய பாக். ரசிகர்கள்!!

4 விக். வீழ்த்திய தாமஸ்

4 விக். வீழ்த்திய தாமஸ்

மற்ற வீரர்கள் யாரும் எதிர்பார்த்தபடி ஆடவில்லை. சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறி, ரசிகர்களை ஏமாற்றினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தாமஸ் 4 விக்கெட்டுகளும், கேப்டன் ஜாசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

குறைந்த ஸ்கோர்

குறைந்த ஸ்கோர்

ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய ரசல் 2 விக்கெட்டுகளும், ஷெல்டன் காட்ரெல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். பிரம்மாண்ட ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பாகிஸ்தான் 105 ரன்களுக்குள் சுருண்டு,உலக கோப்பை வரலாற்றில் 2வது முறையாக குறைந்தபட்ச ஸ்கோர் என்ற மோசமான வரலாற்றை பதிவு செய்தது.

ஏமாற்றம் தந்த ஹோப்

ஏமாற்றம் தந்த ஹோப்

இதனை அடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. எளிதான இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, ஹோப் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். தொடர்ந்து வந்த டேரன் பிராவோ டக் அவுட்டாக ஆட்டம் எப்படி போகுமோ என்று எதிர்பார்ப்பு எழுந்தது.

கெயில் 50

கெயில் 50

மறு முனையில் தொடர்ந்து அதிரடியாக விளாசிய காட்டடி மன்னன் கிறிஸ் கெயில் 34 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சர் என 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த பூரன், ஹெட்மெயர் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி , 13.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 108 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலாக தமது முதல் வெற்றியை பதிவு செய்தது. பிரம்மாண்டமான ரன் குவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி குறைந்த நேரத்திலே முடிவுக்கு வந்ததால் ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றத்தை அளித்தது.

Story first published: Friday, May 31, 2019, 19:27 [IST]
Other articles published on May 31, 2019
English summary
West indies beat Pakistan by 7 wickets in world cup 2019.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X