For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தென்.ஆ., விடம் தோற்ற கோபம்.. ஆஸி., அணியை வச்சு செய்த வெஸ்ட் இண்டீஸ் - ரணகளமாக தொடரை வென்றது

செயின்ட் லூசியா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிப் பெற்று தனது சர்வ வல்லமையை நிரூபித்திருக்கிறது.

Recommended Video

கடைசி T20 போட்டியிலும் Australia-வை வீழ்த்தியது West Indies

வெஸ்ட் இன்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, அங்கு முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

இதில், எதிர்பார்க்காத அளவுக்கு ஆஸ்திரேலியா மிக மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது.

 தலைக்கு 2 சிக்ஸ்

தலைக்கு 2 சிக்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி தான் டி20-ஐ பொறுத்தவரை ராஜா என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து ஏது? நம்பர்.1 வீரர் முதல் 11 வது வீரர் வரை சிக்ஸ் அடிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்கின்றனர். அதுவே அவர்களது ஒரே பலம். மற்றபடி அந்த வீரர்களிடையே கன்சிஸ்டன்சி பெரிதாக இருக்காது. ஆனால், அடிப்பார்கள். தலைக்கு 2 சிக்ஸ் பறக்கும். கூட்டிக் கழித்துப்பார்த்தால் எப்படியும் 11 - 16 சிக்ஸர்கள் ஒவ்வொரு போட்டிக்கும் பிசிறில்லாமல் பறந்துவிடும். பிறகு எங்கிருந்து எதிரணி ஜெயிப்பது?

 199 ரன்கள்

199 ரன்கள்

அப்படித்தான், இப்போது வெஸ்ட் இன்டீஸிடம் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது ஆஸ்திரேலியா. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஏற்கனவே 3-1 என்று தொடரை இழந்திருந்த ஆஸ்திரேலியா, நேற்று (ஜுலை.16) இறுதி டி20 போட்டியில் விளையாடியது. இதில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக எவின் லெவிஸ் 34 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார்.

 இவ்வளவு மோசமாக

இவ்வளவு மோசமாக

இதையடுத்து, 200 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது. அதிகபட்சமாக ஆரோன் ஃபின்ச் 34 ரன்கள் எடுத்தார். இதர வீரர்களும் ஓரளவுக்கு கணிசமாக விளையாடினாலும், இலக்கை எட்ட முடியவில்லை. இதன் மூலம் 4-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. கடந்த சில வருடங்களில், ஆஸ்திரேலியா இவ்வளவு மோசமாக தொடரை இழந்திருக்க வாய்ப்பில்லை.

 இது வேற களம்

இது வேற களம்

கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவிடம் டி20 தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ், அந்த கோபத்தை ஆஸ்திரேலியாவிடம் வெளிப்படுத்தி வச்சு செய்திருக்கிறது. இதன் பிறகு, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இதன் முதல் போட்டி வரும் 20ம் தேதி தொடங்குகிறது. டி20ல் வெற்றிப் பெற்றதற்காக ஒருநாள் தொடரிலும் வெஸ்ட் இண்டீஸ் ஜெயிக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அது வேற களம். இது வேற களம். அவுக.. டி20 போட்டிகளில் மட்டும் தாம் சம்பவம் செய்வார்கள்.

Story first published: Saturday, July 17, 2021, 11:34 [IST]
Other articles published on Jul 17, 2021
English summary
WI beats aus in 5th t20 and won series 4-1 - வெஸ்ட் இண்டீஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+