For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

12 பந்துகளில் 5 விக்கெட்... 43 ரன்களுக்கு வங்கதேசத்தை சுருட்டி அள்ளிய ரோச்!

முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தை 43 ரன்களுக்கு சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ். அதன் வேகப்பந்து வீச்சாளர் ரோச் 12 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

Recommended Video

ஒரே தொடரில் வங்கதேசத்தின் பல மோசமான சாதனைகள்- வீடியோ

டெல்லி: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 43 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் சுருட்டியது. வேகப்பந்து வீச்சாளர் கெர்னர் ரோச் 12 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்தி மிரட்டினார்.

வங்கதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை தேர்வு செய்தது.

west indies bowler took 5 wickets in 12 balls

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தாஸ் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். 4 பேர் டக் அவுட்டாகினர்.

வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கெர்னர் ரோச் 5 ஓவர்களில் ஒரு மேடின் வீசினார். 8 ரன்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். 12 பந்துகள் இடைவெளியில் அவர் இந்த 5 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

டெஸ்ட் போட்டிகளில் வங்கதேசம் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். 2007ல் இலங்கைக்கு எதிராக 62 ரன்கள் எடுத்திருந்ததே வங்கதேசத்தின் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது.

Story first published: Thursday, July 5, 2018, 10:00 [IST]
Other articles published on Jul 5, 2018
English summary
Bangladesh bundled for 43 runs. west indies bowler roach took 5 wickets in 12 balls.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+