For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

11 ஆண்டுகள்.. மானம் காத்த பிராத்வெய்ட்.. அசாத்தியத்தை நிகழ்த்துமா வெஸ்ட் இண்டீஸ்? அச்சத்தில் ஆஸி!

பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

அண்மைக் காலமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை போன்று ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அணியை யாராலும் பார்த்திருக்க முடியாது. டி20 கிரிக்கெட் என்று எடுத்து கொண்டால், 250 ரன்கள் இலக்கையும் எட்டி பிடிக்கும், 100 ரன்களிலும் ஆல் அவுட்டாகும்.

அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் என்றால் இறுதி மூச்சு வரை போராடி வெற்றியை பெறும். அதேபோல் 3வது நாளின் இரண்டாவது செஷனிலேயே தோல்வியை சந்திக்கும். இப்படிதான் வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட் விளையாடி வருகிறது.

சாம்பியன் அணியா இது??.. இங்கிலாந்தை பந்தாடிய ஆஸ்திரேலியா.. முதல் ஒருநாள் போட்டியில் அபார வெற்றி! சாம்பியன் அணியா இது??.. இங்கிலாந்தை பந்தாடிய ஆஸ்திரேலியா.. முதல் ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!

தொடக்க வீரர் பிராத்வெய்ட்

தொடக்க வீரர் பிராத்வெய்ட்

வெஸ்ட் இண்டீஸ் அணியால் கன்சிஸ்டன்சியோடு விளையாட முடியாது என்ற விமர்சனம் தொடர்ந்துகொண்டே வருகிறது. ஆனால் அதே வெஸ்ட் இண்டீஸ் அணியில் கன்சிஸ்டன்சிக்கு எடுத்துக் காட்டாக விளையாடி வருகிறார் கேப்டன் பிராத்வெய்ட். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரராக கடந்த 11 ஆண்டுகளாக சதம் அடித்த ஒரே வீரர் பிராத்வெய்ட் மட்டும்தான். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்டை ஒற்றை ஆளாக சுமந்து வருகிறார் என்றே கூறலாம்.

ஆஸி. அபாரம்

ஆஸி. அபாரம்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்மித், லபுஷேன் ஆகியோரின் இரட்டை சதத்தால் 598 ரன்களை விளாசியது. தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி பிராத்வெய்ட் மற்றும் சந்தர்பால் ஆகியோரின் அரைசதத்தில் 283 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸி. அணி 182 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி இலக்காக 498 ரன்களை நிர்ணயித்தது.

498 ரன்கள் இலக்கு

498 ரன்கள் இலக்கு

கிட்டத்தட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இலக்கை அடைய 2 நாட்கள் இருந்தாலும், ஆஸ்திரேலிய மண்ணில் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. இதனால் 4வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிராத்வெய்ட், ஆஸ்திரேலிய அணிக்கு பிரச்சினையை ஏற்படுத்தியது.

அசாத்தியம் நிகழ்த்திய பிராத்வெய்ட்

அசாத்தியம் நிகழ்த்திய பிராத்வெய்ட்

நிதானமான விளையாடிய பிராத்வெய்ட் ஆஸ்திரேலிய மண்ணில் 4வது இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 11வது சதத்தை பதிவு செய்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் எதிரணி பேட்ஸ்மேன்கள் சதம் விளாசுவதே பெரிய விஷயமாக இருக்கும் சூழலில், பிராத்வெய்ட் அசாத்தியத்தை நிகழ்த்தி காட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்களை விளாசி சாதனை படைத்துள்ளார். இவருக்கு ரசிகர்களும், முன்னாள் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் 306 ரன்கள்

இன்னும் 306 ரன்கள்

இந்தப் போட்டியில் இன்னும் ஒருநாள் மீதமுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற 306 ரன்கள் தேவை உள்ளது. மறுபக்கம் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற 7 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும். பார்டர் கவாஸ்கர் தொடரின் போது இந்திய அணி இதேபோல் நிலையில் இலக்கை எட்டி சாதித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, December 3, 2022, 19:53 [IST]
Other articles published on Dec 3, 2022
English summary
West Indies captain Brathwaite scored a century in the 2nd innings of the Test match against Australia.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X