For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் பிரச்சினையில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. கேப்டன் பதவியிலிருந்து பூரான் விலகல்..கிரேட் எஸ்கேப்

பார்பிடாஸ் : வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக நிக்கோலஸ் பூரான் அறிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த பொலார்ட், தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து நிக்கோலஸ் பூரான் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஆனால் நிக்கோலஸ் பூரான் தலைமையிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக செயல்படவில்லை. இதற்கு நட்சத்திர வீரர்கள் பலர் அணியில் இடம்பெறாமல் கம்பியை நீட்டிவிட்டு சென்றனர். கடைசி நேரத்தில் விமானம் ஏறாமல் ஷிம்ரன் ஹேட்மயர் கூட டாடா காட்டினார். இதனால் நிக்கோலஸ் பூரான் மட்டும் தான் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மேன்கள் வரிசையில் அறியப்பட்ட முகமாக விளங்கினார்.

மிகுந்த ஏமாற்றம்

மிகுந்த ஏமாற்றம்

தற்போது டி20 உலக கோப்பை தொடரில் முதல் சுற்றிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது. கத்துக்குட்டி அணிகளான அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்திடம் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியை தழுவியது அந்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது .இதனை அடுத்து தான் நிக்கோலஸ் பூரான், தனது ராஜினாமா முடிவை அறிவித்தார் .இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நிக்கோலஸ் பூரான், நான் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்படுவேன் என்று தான் கிரிக்கெட் வாரியம் இந்த பொறுப்பை கொடுத்தது.

மதிப்பிட முடியாது

மதிப்பிட முடியாது

ஆனால் டி20 உலக கோப்பையில் அடைந்த தோல்வி எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இந்த பொறுப்பை நான் மிகுந்த கருவத்துடனும் , பெருமையுடனும் ஏற்று செயல்பட நினைத்தேன். என்னால் முடிந்த அளவுக்கு அனைத்தையும் கடந்த ஒரு ஆண்டுகளாக வழங்கினேன். இந்த ஒரு தோல்வியால் எங்கள் அணி குறித்து தரக்குறைவாக மதிப்பிட முடியாது. எனினும் புதிய அணியை பலப்படுத்தும் வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

காரணம்

காரணம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் புதிய கேப்டனை தேர்வு செய்ய அவர்களுக்கு நேரம் வேண்டும் என்பதற்காக இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன். மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கிரிக்கெட் தொடர் உள்ள நிலையில் அதற்குள் புதிய கேப்டன் தேர்ந்தெடுக்கப்படுவார் என நம்புகிறேன் .கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் நான் இனி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் விளையாட மாட்டேன் என்று யாரும் நினைக்க வேண்டாம்.

ஒத்துழைப்பு தருவேன்

ஒத்துழைப்பு தருவேன்

நான் எப்போதும் போல் எனது முழு ஒத்துழைப்பையும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்குவேன். ஒரு அணியில் சீனியர் வீரராக என்னுடைய சேவையையும் ஆதரவு பணியையும் நான் செய்வேன். அணியின் நல்லதற்காகவே இந்த முடிவை நான் எடுத்தேன். தனிப்பட்ட முறையில் என்னுடைய பேட்டிங்கை மீண்டும் வலுப்பெற முயற்சி செய்வேன். நான் தொடர்ந்து அதிரடியாக விளையாட விரும்புகிறேன்.

அடுத்த கேப்டன் யார்?

அடுத்த கேப்டன் யார்?

முக்கிய கட்டத்தில் அணிக்கு பேட்டிங் மூலம் வலு சேர்க்க விரும்புகிறேன். வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் பழைய படி வெற்றிகரமாக அணியாக விளங்க வேண்டும் என நான் கருதுகிறேன். இந்த வாய்ப்பை கொடுத்து என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி என்று நிக்கோலஸ் பூரான் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியில் புதிய கேப்டனாக ரோமேன் பொவேல் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, November 21, 2022, 23:50 [IST]
Other articles published on Nov 21, 2022
English summary
West indies captain Nicholas Pooran resigned from captaincy role மீண்டும் பிரச்சினையில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. கேப்டன் பதவியிலிருந்து பூரான் விலகல்..கிரேட் எஸ்கேப்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+