இந்தியாவை கவிழ்க்க மாஸ்ட்ர் ஸ்கெட்ச்..! ஜாம்பவான்களின் கதவை தட்டும் வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம்
போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்திய அணியை எப்படி வீழ்த்துவது என்று லாராவின் உதவியை வெஸ்ட் இண்டீஸ் அணி நாடியிருக்கிறது.
இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி 20 மற்றும் ஒரு நாள் தொடரை இந்தியா ஏற்கனவே கைப்பற்றி விட்டது. தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் பாக்கி இருக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதியும், 2வது டெஸ்ட் போட்டி 30ம் தேதியும் தொடங்குகிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பலப்படுத்த நிர்வாகம் முடிவு எடுத்திருக்கிறது. அதற்காக, முன்னாள் வீரரான சர்வான் மற்றும் லாராவிடம் ஆலோசனை நடத்தி இருக்கிறது.

பயிற்சிகள்
அதன்படி லாராவும், சர்வானும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு சிறப்பு பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்குகின்றனர். ஏனெனில் அவர்கள் இருவரும் பல டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ளனர். அவர்களின் அனுபவம் வீரர்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும்.

நெருக்கடி தரும்
ஆலோசனைகள், பயிற்சிகள் இளம் வீரர்களுக்கு மிகவும் பயனளிக்கும். இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக ஆலோசனைகள் இருக்கும். அதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சிறப்பாக விளையாட வாய்ப்பு இருக்கும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கருதுகிறது.

ரசிகர்கள் கருத்து
ஆனால் இது காலம் கடந்த நடடிவக்கை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். உலக கோப்பை தொடரில் தோல்வி அடைந்த போது எதுவும் நடவடிக்கை எடுத்த மாதிரி தெரிய வில்லை. அப்போது எந்த நடவடிக்கை எடுக்க வில்லை என்று, டி 20, ஒருநாள் தொடரை கோட்டைவிட்டு விட்டு இப்போது டெஸ்ட் தொடரை பற்றி கவலைப்படுவதாக கூறியுள்ளனர்.

மறுப்பு
ரசிகர்களின் குற்றச்சாட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் முற்றிலும் ஏற்க மறுத்திருக்கிறது. ஜாம்வான் லாரா மற்றும் சர்வான் ஆகியோரின் ஆலோசனை மற்றும் பயிற்சிகள் அந்த அணி இளம் வீரர்களுக்கு மிகவும் உதவும். அவர்களின் ஆலோசனை மூலம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சிறப்பாக விளையாட வாய்ப்பு இருக்கும் என்று நிர்வாகம் நம்புகிறது.


Click it and Unblock the Notifications