Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'கண்ணுல பயத்தை காட்டிட்டாங்கடா பரமா'... !

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடி வரும் மேற்கு இந்திய அணி வீரர்கள் மறக்க முடியாத ஒரு பய அனுபவத்தை சந்தித்துள்ளனர்.

டுனிடின் நகரிலிருந்து வெல்லிங்டன் நகருக்கு விமானத்தில் பயணித்த அவர்கள், பலத்த காற்று காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் தவித்ததால் பெரும் பீதிக்குள்ளானார்கள்.

இந்த பய அனுபவம் குறித்து அணி கேப்டன் டேரன் சமி ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து சமி கூறியுள்ளதாவது...

மறக்க முடியாத விமான பயணம்

மறக்க முடியாத விமான பயணம்

நானும் சரி என்னுடன் வந்த வீரர்களும் சரி, அந்த விமானத்தில் இருந்தவர்களும் சரி வாழ்க்கையில் இந்த அனுபவத்தை மறக்க முடியாது. அத்தனை பேரும் நடுங்கிப் போய் விட்டோம்.

பெரும் பீதி

பெரும் பீதி

நானும் எனது வீரர்களும் விமானம் பத்திரமாக தரையிறங்குமா என்று அஞ்சும் நிலை ஏற்பட்டு விட்டது.

பிட்ச்சை விட பயங்கரம்

பிட்ச்சை விட பயங்கரம்

2வது டெஸ்ட் போட்டிக்கான பேசின் ரிசர்வ் பிட்ச்சை விட பயங்கரமாக இருந்தது இந்த அனுபவம்.

என்ஜின் உடைந்து விட்டதோ...

என்ஜின் உடைந்து விட்டதோ...

ஒரு நிமிடம் நான் விமானத்தின் என்ஜின்களில் ஒன்று உடைந்து விட்டதோ என்று சந்தேகப்பட்டேன்.

பச்சப் புள்ள போல அழுதேன் பாஸ்...

பச்சப் புள்ள போல அழுதேன் பாஸ்...

எனது மகள் வீரிட்டழுவதைப் போல நானும் அழுது விட்டேன். அந்த அளவுக்கு பயந்து விட்டேன்.

மறுபடியும் போக மாட்டேங்க

மறுபடியும் போக மாட்டேங்க

மறுபடியும் இந்த மார்க்கத்தில் விமானத்தில் போகவே மாட்டேன். பஸ் பயணமே போதும். அட, படகில் கூட போகத் தயார் என்றார் அவர்.

கடும் காற்றால் ஆடிய விமானம்

கடும் காற்றால் ஆடிய விமானம்

விமானம் தரையிறங்க முயற்சித்தபோது பலத்த காற்று வீசியதால் தரையிறங்க முடியாமல் தடுமாறியது அந்த விமானம். பலமாகவும் ஆடியது. இதனால்தான் அனைவரும் பீதியாகி விட்டனர். இருப்பினும் எந்தவித பிரச்சினையும் இன்று பின்னர் விமானம் தரையிறங்கியது.

Story first published: Wednesday, December 11, 2013, 17:18 [IST]
Other articles published on Dec 11, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+