Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WI vs ENG: கொம்பன் இறங்கிட்டான் மாமா! இங்கிலாந்தை பந்தாடிய 2 முறை சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ்

மும்பை: டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பி பிரிவின் 15 ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி கடைசி வரை ஆக்சன் திரில்லர் படம் போல் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பிராண்டன் கிங் ஒரு ரன்னிலும், கேப்டன் ஹோப் டக் அவுட்டாகியும் பெவிலியன் திரும்பினர்.

மூன்றாவது வீரராக விளையாடிய சிம்ரன் ஹெட்மயர் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி என 12 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார்ம் நடுவரிசையில் ராஸ்டன் சேஸ் 29 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறினாலும் மறுமுனையில் செர்பன் ரூதர்போர்ட் அதிரடி காட்டி தன் வாழ்நாளில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடினார்.

42 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஏழு இமாலய சிக்சர், இரண்டு பவுண்டரிகள் அடித்து 76 ரன்கள் சேர்த்தார். இறுதியில் முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் நான்கு சிக்சர், ஒரு பவுண்டர் என 17 பந்துகளில் 33 ரன்கள் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் என்ற சவாலான இலக்கை தொட்டது.

இங்கிலாந்து பந்துவீச்சில் ஆதில் ரசித், ஜெமி ஓவர்டன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர் இதனை அடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பில் சால்ட் நான்கு பவுண்டரி, இரண்டு சிக்சர் என 14 பந்துகளில் 32 ரன்களும், ஜாஸ் பட்லர் 14 பந்துகளில் 21 ரன்களும் குவித்து நல்ல தொடக்கத்தை அளித்தனர்.

இந்த ஜோடி 3.2 ஓவர்கள் எல்லாம் 38 ரன்களில் ஒரு விக்கெட்டை எடுத்தது பவர்பிளே முடிந்த சில பந்துகளில் பட்லர் ஆட்டமிழக்க ஜேக்கப் பொத்தேல் 23 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். டாம் பென்டன் இரண்டு ரன்களில் ஆட்டம் இழக்க, கேப்டன் ஹாரி புரூக் முக்கிய கட்டத்தில் 17 ரன்களில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் போராடியது. எனினும் சாம்கரன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் தனி ஆளாக போராடினார் இதனால் போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

வெற்றி கை அருகே இருந்த சூழலில் வெஸ்ட் இண்டீஸ் அணி சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. யாருமே எதிர்பாராத வகையில் ஆடுகளம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக செயல்பட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கை ஓங்கியிருந்தது. இங்கிலாந்து அணியின் கீழ் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க ஷாம்கரன் மட்டும் 30 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்தார். இதனால் 19 ஒவ்வொரு முடிவில் இங்கிலாந்து அணி 166 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று குருப் சி பிரிவில் முதல் இடத்தில் பிடித்துள்ளது.

Story first published: Wednesday, February 11, 2026, 22:48 [IST]
Other articles published on Feb 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+