For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு மைதானம் கூட ப்ரீயா இல்லை.. வெஸ்ட் இண்டீஸ் அணி பயிற்சிக்கு கைவிரித்த பிசிசிஐ

துபாய் : வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது துபாயில் ஐசிசி பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது.

இதற்கு இந்தியா வந்து பயிற்சி மேற்கொள்ள முயன்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிசிசிஐ மைதானம் காலியாக இல்லை எனக் கூறி கைவிரித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் துபாயில் பயிற்சி

வெஸ்ட் இண்டீஸ் துபாயில் பயிற்சி

பிசிசிஐ மறுப்பு தெரிவித்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணி துபாயில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. ஐசிசி பயிற்சி மையம் துபாயில் தான் அமைந்துள்ளது. அங்கே இப்போது ஆசிய கோப்பை தொடர் நடந்து வரும் நிலையில், அங்கே பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளோடு வெஸ்ட் இண்டீஸ் அணியும் பயிற்சி செய்து வருகிறது.

உள்ளூர் போட்டிகள் தான் காரணம்

உள்ளூர் போட்டிகள் தான் காரணம்

இது பற்றி விளக்கமளித்த பிசிசிஐ அதிகாரி ஒருவர், "இந்தியாவில் தற்போது உள்ளூர் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த முறை அதிக அணிகள் பங்கேற்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மைதானம் ஒதுக்குவதில் சிரமம் உள்ளது" என தெரிவித்தார்.

கைகொடுக்கும் ஐசிசி பயிற்சி மையம்

கைகொடுக்கும் ஐசிசி பயிற்சி மையம்

துபாயில் இருக்கும் ஐசிசி பயிற்சி மையம் தான் இப்போது இந்திய துணை கண்ட நாடுகளில் ஆடும் மற்ற நாட்டு அணிகளுக்கு ஏற்ற பயிற்சி இடமாக அமைந்துள்ளது. மற்ற நாடுகளில் அதிக காலம் பயற்சி செய்ய முடியாவிட்டால், அந்த அணிகள் துபாயில் தான் பயிற்சி மேற்கொள்கின்றனர். அங்குள்ள வெப்பநிலை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் வெப்பநிலையை ஒட்டியே இருக்கும் என்பதால் அது அவர்களுக்கு உதவியாக உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடர் விவரம்

வெஸ்ட் இண்டீஸ் தொடர் விவரம்

வெஸ்ட் இண்டீஸ் அணி அக்டோபர் 4 முதல் தொடங்கி 3 டெஸ்ட் போட்டிகள், 4 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.

Story first published: Monday, September 24, 2018, 17:54 [IST]
Other articles published on Sep 24, 2018
English summary
West Indies denied ground for practice in India by BCCI. They are now practicing at ICC Global centre at Dubai.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X