Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொல்கத்தா : முதல் இன்னிங்ஸில் மே. இ. தீவுகள் 238 ரன்னில் அவுட்! இந்தியா- 37/0

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கும் 199வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல்நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்துள்ளது.

40 வயதான டெண்டுல்கர் 198 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். 200-வது டெஸ்ட் போட்டியோடு அவர் ஓய்வு பெறுகிறார். அவர் விளையாடும் 199-வது போட்டி இது. இப்போட்டியில் டெண்டுல்கர் உருவம் பொறித்த தங்கத்திலானா காசில் டாஸ் போடப்பட்டது.

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த தங்க நாணயம், டெண்டுல்கருக்கு பரிசாக கொடுக்கப்பட்டது.

பந்துவீச்சு அருமை

பந்துவீச்சு அருமை

இன்றைய போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு நன்றாக அமைந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட்டுகள் தொடர் சரிந்து கொண்டே இருந்தன. கிறிஸ் கெயில் 18 ரன்கள் எடுத்திருந்தபோது புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் போவெல் 28 ரன்களில் வீழ்ந்தார்.

238 ரன்களில் ஆட்டம் இழந்தது

238 ரன்களில் ஆட்டம் இழந்தது

இதனை தொடர்ந்து வந்த வீரர்களில் சாமுவேல் அதிகபட்சமாக 65ரன்கள் எடுத்தார். இதேபோல் சந்தர்பால் 36 ரன்கள் எடுத்திருந்தார். இவர்களைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தால் அந்த அணி முதல் இன்னிங்சில் 238 ரன்களுக்குள் ஆட்டம் இழந்தது.

ஷமி 4 விக்கெட்டுகள்- டெண்டுல்கர் 1 விக்கெட்

ஷமி 4 விக்கெட்டுகள்- டெண்டுல்கர் 1 விக்கெட்

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஷமி முகம்மது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். டெண்டுல்கர், புவனேஸ்குமார், ஓஜா, தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷேன் ஷில்லிங் ஃபோர்டை எல்.பி.டபிள்.யூ முறையில் டெண்டுல்கர் அவுட் ஆக்கினார்.

விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள்

விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள்

இதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 21ரன்களுடனும் முரளி விஜய் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

சதமடிப்பாரா சச்சின்?

சதமடிப்பாரா சச்சின்?

சச்சின் டெண்டுல்கர் சதமடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். ஏனெனில் டெஸ்ட் போட்டியில் டெண்டுல்கர் சதம் அடித்து 33 மாதங்கள் ஆகிவிட்டது. அடுத்த டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற இருப்பதால் அவரது சதத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

2011 டெஸ்ட் போட்டியில்தான் சதம்

2011 டெஸ்ட் போட்டியில்தான் சதம்

டெண்டுல்கர் கடைசியாக 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இருந்தார்.

21 டெஸ்ட்டில் சதமே அடிக்கவில்லை

21 டெஸ்ட்டில் சதமே அடிக்கவில்லை

அதன்பிறகு டெண்டுல்கர் 21 டெஸ்டில் விளையாடி விட்டார். ஆனால் சதமே அடிக்கவில்லை.

90ஐ தாண்டியும் 100ஐ எட்டவில்லை

90ஐ தாண்டியும் 100ஐ எட்டவில்லை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மும்பை டெஸ்ட் போட்டியில் 94 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சிட்னி டெஸ்ட் போட்டியில் 80 ரன்களிலும் சென்னை டெஸ்ட் போட்டியில் 81 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்.

சதத்துக்காக தவம்

சதத்துக்காக தவம்

இதனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது 199-வது டெஸ்ட் போட்டியில் டெண்டுல்கர் சதம் அடிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

கொல்கத்தாவில் 862 ரன்கள்

கொல்கத்தாவில் 862 ரன்கள்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் டெண்டுல்கர் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 20 இன்னிங்ஸ் 862 ரன் எடுத்துள்ளார். இதில் 2 சதமும், 6 அரை சதமும் அடங்கும்.

Story first published: Wednesday, November 6, 2013, 17:21 [IST]
Other articles published on Nov 6, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+