Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. 12 வீரர்கள் பட்டியலை அறிவித்தது மேற்கிந்திய தீவுகள் அணி

ஆன்டிகுவா: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட உள்ள தங்கள் நாட்டு வீரர்களை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தேர்வுக்குழு இன்று அறிவித்தது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான 12 பேர் கொண்ட அந்த அணியில் மார்லன் சாமுவேல்ஸ், டேரன் பிராவோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆன்டிகுவாவில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி ஏற்கனவே பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கும் நோக்கத்தோடு, மே.இ.தீவுகள் சென்று சேர்ந்துள்ளது. வாரிய லெவன் அணிக்கு எதிரான போட்டி டிராவில் முடிந்த நிலையில் இந்திய அணி தொடர் பயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

West Indies name 12-man squad for India Tests

இந்நிலையில், மேற்கிந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தனது வீரர்கள் பட்டியலை இன்று அறிவித்தது. வேகப்பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான ஜேசன் ஹோல்டர் கேப்டனாக செயல்படுவார். க்ரைக் பிராத்வெயிட் துணஐ கேப்டனாகவும், ஷேன் டோவ்ரிச் விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார்கள்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் நீண்ட கால விக்கெட் கீப்பர் ராம்தினுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இரு தினங்கள் முன்பே இதை உணர்ந்த ராம்தின், தனது அதிருப்தியை டிவிட்டரில் வெளிப்படுத்தியிருந்தார். அவர் 74 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவக்காரராகும்.

ஆல்-ரவுண்டர், ரோஸ்டன் சேசுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர், 29 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 2 செஞ்சுரிகள் விளாசியுள்ளார். ஆப்-ஸ்பின் பந்துகளையும் இவர் வீசுவார்.

அணியில் ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர் என்றால் அது தேவேந்திர பிஷு மட்டுமே.

மேற்கிந்திய தீவுகள் அணி விவரம்: ஜேசன் ஹோல்டர், க்ரைக் பிராத்வெயிட், தேவேந்திர பிஷு, ஜெர்மைன் பிளாக்வுட், கார்லஸ் பிராத்வெயிட், டேரன் பிராவோ, ராஜேந்திர சந்திரிகா, ரோஸ்டன் சேஸ், ஷேன் டோவ்ரிச், ஷன்னான் கேப்ரியல், லீயோன் ஜான்சன், மார்லன் சாமுவேல்ஸ்.

இந்திய அணி விவரம்: விராட் கோஹ்லி, அஜிங்கிய ரஹானே, முரளி விஜய், ஷிகர் தவான், கே.எல்.ராகுல், செடேஷ்வர் புஜாரா, ரோகித் ஷர்மா, விருதிமான் சாஹா, ஆர்.அஸ்வின், அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், ஷர்துல் தாகுர், ஸ்டூவர்ட் பின்னி.

Story first published: Tuesday, July 12, 2016, 11:37 [IST]
Other articles published on Jul 12, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+