Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை 2026: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. கேப்டனாக நட்சத்திர வீரர் நியமனம்

பார்படாஸ்: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்டர் ஷாய் ஹோப் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் 15 பேர் கொண்ட அணியை வெளியிட்டது.

பிப்ரவரி 7 முதல் மார்ச் 8, 2026 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் இத்தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. ஐந்து இந்திய, மூன்று இலங்கை மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். மேற்கிந்தியத் தீவுகள் தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 7 அன்று கொல்கத்தாவில் ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது.

அணியில் ஜேசன் ஹோல்டர், ரோவ்மன் பவல், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரோன் ஹெட்மையர், ரொமாரியோ ஷெப்பர்ட் போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால், முன்னாள் மும்பை இந்தியன்ஸ் ஓப்பனர் எவின் லூயிஸுக்கு அணியில் இடம் இல்லை. துபாயில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சமீபத்திய தொடரில் அவர் சோபிக்கவில்லை என்பதே இதற்கு முக்கிய காரணம்.

மேலும், கடந்த ஆண்டு டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற நிகோலஸ் பூரன், ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோரும் அணியில் சேர்க்கப்படவில்லை. 2 முறை டி20 உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி இம்முறை சாதிக்க வேண்டிய உத்வேகத்தில் விளையாடுகிறது. கடந்த 2024 தொடரில், லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது.

இது குறித்து பதிவிட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி "ஒவ்வொரு ஷாட், ஒவ்வொரு கொண்டாட்டம் மற்றும் ஒவ்வொரு நம்பிக்கையின் தருணம் மூலம், நாம் யார் என்பதை உலகிற்கு காட்டுகிறோம்! இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் மக்களின் நம்பிக்கையையும் கனவுகளையும் தாங்கிச் செல்லப் போகும் வீரர்கள் இவர்கள் தான் என்று குறிப்பிட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை 2026-க்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி: ஷாய் ஹோப் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஜான்சன் சார்லஸ் (விக்கெட் கீப்பர்), ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஷிம்ரோன் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹசைன், ஷமார் ஜோசப், பிராண்டன் கிங், குடகேஷ் மோடி, ரோவ்மன் பவல், ஷெர்ஃபான் ரூதர்ஃபோர்ட், குவின்டின் சாம்ப்ஸன், ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்.

Story first published: Monday, January 26, 2026, 19:48 [IST]
Other articles published on Jan 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+