For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வேக வேகமாக பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்.. இந்திய தொடருக்கு முன் மே.தீவுகள் அதிரடி!

Recommended Video

India vs West Indies | Monty Desai appointed as West Indies as batting coach

மேற்கிந்திய தீவுகளின் புதிய பேட்டிங் கோச்சாக மாண்டி தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவிற்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி நாளை மறுதினம் களமிறங்கும் சர்வதேச டி20 தொடரில் இருந்தே இவர் தனது பயிற்சியை துவங்கவுள்ளார்.

கனடா, ஆப்கானிஸ்தான், யூஏஇ அணிகளுக்கு இவர் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். தன்னுடைய நியமனம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மாண்டி, தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்சுடன் இணைந்து செயலாற்ற ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாண்டி தேசாயின் நியமனம் குறித்து மகிழ்சசி தெரிவித்துள்ள மேற்கிந்திய தீவுகளின் தலைமை பயிற்சி பில் சிம்மன்ஸ், அணி வீரர்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள மாண்டி மிகச்சிறப்பாக உதவுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 புதிய தலைமை பயிற்சியாளர்

புதிய தலைமை பயிற்சியாளர்

மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பாக செயல்பட சமீபத்தில் அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அணியின் தலைமை பயிற்சியாளராக பில் சிம்மன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 மாண்டி தேசாய் நியமனம்

மாண்டி தேசாய் நியமனம்

இந்நிலையில் அணியின் புதிய பேடடிங் பயிற்சியாளராக மாண்டி தேசாயை நியமித்து மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பல அணிகளில் பயிற்சியாளராக பணியாற்றியுள்ள இவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய நம்பிக்கை வரவாக உள்ளார்.

 யூஏஇ அணிக்கும் பயிற்சியாளர்

யூஏஇ அணிக்கும் பயிற்சியாளர்

கனடாவின் ஐசிசி உலக கிரிக்கெட் லீக் டிவிஷன் 2 அணிக்காக தலைமை பயிற்சியாளராகவும் ஆப்கானிஸ்தானின் ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை அணியின் பேட்டிங் கோச்சாகவும் மாண்டி பணியாற்றியுள்ளார். இதேபோல யூஏஇ அணிக்காக ஐசிசி டி20 உலக கோப்பை தகுதி போட்டிக்கான பேட்டிங் கோச்சாகவும் மாண்டி இருந்துள்ளார்.

 இந்திய அணிக்கு எதிராக பயிற்சி

இந்திய அணிக்கு எதிராக பயிற்சி

இந்தியாவிற்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி ஐதராபாத்தில் நாளை மறுதினம் களமிறங்க உள்ள சர்வதேக டி20 போட்டிகளில் இருந்து மேற்கிந்திய தீவுகளுக்கான தனது பயணத்தை மாண்டி துவங்க உள்ளார். இவருக்கு 2 வருட காலம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

 சிம்மன்சுடன் இணைந்து செயலாற்ற விருப்பம்

சிம்மன்சுடன் இணைந்து செயலாற்ற விருப்பம்

மேற்கிந்திய தீவுகள் அணியில் வெற்றிச்சூழலை உருவாக்க விருப்பம் தொவித்துள்ள மாண்டி, தேசாய், அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ், கிரிக்கெட் இயக்குநர் ஜிம்மி ஆடம்ஸ் மற்றும் கேப்டன்களுடன் இணைந்து செயலாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

 திறமை மிக்கவர் என புகழாரம்

திறமை மிக்கவர் என புகழாரம்

இதனிடையே மாண்டி தேசாயின் நியமனம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பில் சிம்மன்ஸ், தான் முன்னதாகவே மாண்டியுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாகவும், அணியில் வீரர்களின் திறமையை மேம்படுத்தும் வல்லமை மிக்கவர் மாண்டி என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

 பீல்டிங் கோச் நியமனம்

பீல்டிங் கோச் நியமனம்

மாண்டி போலவே மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய பௌலிங் கோச்சாக ராடி எஸ்ட்விக்கும் பீல்டிங் கோச்சாக ரேயான் கிரிபித்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அந்த அணி அடுத்த கட்டத்திற்கு நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, December 4, 2019, 18:18 [IST]
Other articles published on Dec 4, 2019
English summary
West Indies appoints new batting, bowling and Fielding coaches
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+