For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இருந்த நல்ல பௌலரும் ஊருக்கு போயிட்டார்.. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பரிதாப நிலை

ராஜ்கோட் : இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோத உள்ள டெஸ்ட் தொடர் நாளை மறுதினம் (அக்டோபர் 4) தொடங்க உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே நல்ல வீரர்கள் இல்லாமல், அனுபவம் இன்மையால் தடுமாறி வருகிறது.

இந்த நிலையில், முக்கிய வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் முதல் டெஸ்டில் ஆட மாட்டார் என்ற செய்தி வந்துள்ளது.

முதல் டெஸ்டில் இல்லை

முதல் டெஸ்டில் இல்லை

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தற்போதைய நல்ல வேகப்பந்துவீச்சாளராக அடையாளம் காணப்படும் கீமர் ரோச் தன் பாட்டி இறந்துவிட்ட காரணத்தால் வெஸ்ட் இண்டீஸ் கிளம்பி சென்றுள்ளார். எனவே, முதல் டெஸ்டில் அவர் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெற்றிடம் ஏற்பட்டுள்ளது

வெற்றிடம் ஏற்பட்டுள்ளது

இது பற்றி பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டுவர்ட் லா, "துரதிர்ஷ்டவசமாக கீமர் ரோச் இந்தியாவில் இல்லை. முதல் டெஸ்டின் பாதியில் அவர் அணியில் இணைவார். இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கு தயாராக இருப்பார். எங்கள் அணியில் ஒரு தலைமை பண்பு கொண்டவர் அவர். அவர் இல்லாதது அணியில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது" என கூறினார்

கடைசியாக கலக்கிய கீமர் ரோச்

கடைசியாக கலக்கிய கீமர் ரோச்

கடைசியாக கீமர் ரோச் வங்கதேச அணிக்கு எதிராக ஆடிய டெஸ்ட் போட்டியில் 12 பந்துகள் இடைவெளியில் ஐந்து விக்கெட் எடுத்து கலக்கினார். சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளுக்குமான ஒப்பந்தத்தை பெற்றார் கீமர் ரோச்.

அனுபவமில்லாத பந்துவீச்சு

அனுபவமில்லாத பந்துவீச்சு

கீமர் ரோச் இல்லாத நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சு கூட்டணியாக கேப்டன் ஜேசன் ஹோல்டர், ஷானன் காப்ரியல், கீமோ பால் மற்றும் ஷேர்மன் லெவிஸ் உள்ளனர். இவர்களில் கீமோ பால் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடி இருக்கிறார். ஷேர்மன் லெவிஸ் இனி தான் தன் அறிமுக போட்டியில் ஆட உள்ளார்.

Story first published: Tuesday, October 2, 2018, 17:24 [IST]
Other articles published on Oct 2, 2018
English summary
West Indies pace attacker Kemar Roach left India and wont play in first test. He will join in the second test.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+