For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி வரை போராடியும் வீண்… களத்தில் கதறி அழுத பிராத்வொய்ட்..! சமாதானப்படுத்திய நியூசி. வீரர்கள்

மான்செஸ்டர்: நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழந்ததால் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராத்வொய்ட் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் நேற்று நடந்த 29வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தொடங்கியது.

துவக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் குப்தில் மற்றும் முன்ரோ ஆகிய இருவரும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி தந்தனர். இருவரது விக்கெட்டையும் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் சாய்த்தார். பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் இணைந்து பொறுப்புடன் ஆட 23.4 ஓவர்களில் 100 ரன்கள் வந்தது.

வில்லியம்சன் சதம்

வில்லியம்சன் சதம்

டெய்லர் 69 ரன்களில் கெய்லின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். பின்னர் வில்லியம்சன் தனது 13வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த உலக கோப்பையில் அவரது 2வது சதமாகும். அவரது அற்புதமான ஆட்டதால் நியூசிலாந்து அணி சவாலான ஸ்கோரை அடைய வழி வகுத்தது.

காட்ரெல் 4 விக்.

காட்ரெல் 4 விக்.

வில்லியம்சன் 148 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் ஓரளவு ஆடி ரன்களை சேர்த்தனர். முடிவில் நியூசிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் காட்ரெல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சிறப்பான அடித்தளம்

சிறப்பான அடித்தளம்

பின்னர் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட்இண்டீஸ் அணியின் சார்பில் கிறிஸ் கெயில் சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வில்லை.

மாறிய ஆட்டம்

மாறிய ஆட்டம்

170 ரன்களை தொடுவதற்குள் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன் பின்னர் வந்த பிராத்வொய்ட் ஆட்டத்தையே மாற்றினார். நியூசி. பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். அதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை நோக்கிச் சென்றது.

மிரண்ட நியூசி.

மிரண்ட நியூசி.

48வது ஓவரில் அவரின் அதிரடியை பார்த்து நியூசி. மிரண்டது. அந்த ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்து 25 ரன்கள் குவித்தார். அதனால் கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 8 ரன்கள் தான் தேவைப்பட்டது. பிராத்வொய்ட் அணியை வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்தது.

பிராத்வொய்ட் கண்ணீர்

பிராத்வொய்ட் கண்ணீர்

49வது ஓவரில் நீஷம் வந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் போல்ட்டிம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார் பிராத்வொய்ட். அவரின் அந்த சிறிய தவறு, வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றியை பறித்துவிட்டது. மனது உடைந்த அவர், மைதானத்திலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவரை நியூசி. வீரர்கள் ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தனர். 82 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட பிராத்வொய்ட், 5 சிக்சர்கள், 9 பவுண்டரிகளும் 101 ரன்கள் குவித்தார்.

Story first published: Sunday, June 23, 2019, 14:04 [IST]
Other articles published on Jun 23, 2019
English summary
West Indies player brathwaite cried after losing against Newzealand.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+