Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு எதிரான காட்டடி அடித்த கெயில்... சராசரி எவ்வளவு தெரியுமா? 106 ரன்கள்... அம்மாடியோவ்

செயின்ட் லூசியா:இங்கிலாந்து தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யுனிவர்சல் கிரிக்கெட் பாஸ் கெயில் அந்த தொடரில் சராசரியாக 106 ரன்களை குவித்து அசத்தி உள்ளார்.

மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் 4 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கிராஸ் ஐலேட்டில் நடைபெற்றது.

கடைசி ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தின் குறைந்த இலக்கை தனது காட்டடி பேட்டிங் மூலம் ஒன்றுமில்லாமல் ஊதிய மேற்கிந்திய தீவுகள் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 27 பந்துகளில் 77 ரன்களை விளாசி சிக்சர் மழை பொழிந்தார்.

மே.இ. தீவுகள் வெற்றி

மே.இ. தீவுகள் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அந்த தொடரில் கிரிக்கெட்டின் யூனிவர்சல் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெயில் தொடர் நாயகன் விருதை வென்றார்.

கெயில் எடுத்த 424 ரன்கள்

கெயில் எடுத்த 424 ரன்கள்

தொடரில் அவர் எடுத்த ரன்களை பார்த்தால் மயக்கம் வராத குறைதான். தொடரில் கெயில் இரண்டு சதம், இரண்டு அரை சதம் என 424 ரன்களை குவித்தார்.

19 பந்துகளில் அரைசதம்

19 பந்துகளில் அரைசதம்

அதில் 39 சிக்சர்கள் அடங்கும். ரசிகர்கள் அந்த சிக்சர்களை மறக்கவே மாட்டார்கள். அந்த போட்டியில் கெயில் தமது 51வது ஒருநாள் அரைசதத்தை 19 பந்துகளில் எடுத்தார்.

சராசரியாக 106 ரன்கள்

சராசரியாக 106 ரன்கள்

மேலும் 4 போட்டிகளில் 424 ரன்களை எடுத்து இங்கிலாந்து பவுலிங்கை உண்டு, இல்லை என்று பண்ணிவிட்டார் என்று சொல்லலாம். மொத்தம் 424 ரன்கள், அந்த தொடரின் சராசரி 106, 39 சிக்சர்கள். அவரின் இந்த காட்டடியை கண்டு உலகம் முழுவதும் உள்ள மற்ற அணிகளின் வீரர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

Story first published: Monday, March 4, 2019, 17:21 [IST]
Other articles published on Mar 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+