முதல் போட்டியிலேயே சோதனை.. இப்படி ஒரு கிரிக்கெட் சாதனையை முன்னாடி பார்த்து இருக்க மாட்டீங்க!
வெலிங்டன்: மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த வீரர் ஒருவர் தன்னுடைய முதல் போட்டியிலேயே புதிய சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் அவர் செய்து இருக்கும் இந்த சாதனை இதற்கு முன்பு எந்த ஒரு கிரிக்கெட் பிளேரும் செய்யாத சாதனை ஆகும்.
சுனில் அம்பரீஷ் என்ற அந்த பிளேயர் தன்னுடைய முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆகி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் மிகவும் வித்தியாசமான முறையில் அவர் டக் அவுட் ஆகி சென்று இருக்கிறார்.
இந்த டக் அவுட் மூலம் அவர் சோஷியல் மீடியா முழுக்க வைரல் ஆகி இருக்கிறார். பலர் அவர் குறித்து காமெடியாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
முதல் போட்டியிலேயே சாதனை
மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக முதல் முறையாக சுனில் அம்பரீஷ் என்ற பிளேயர் களம் இறங்கினார். இவர் தன்னுடைய முதல் பந்தில் டக் அவுட் ஆகி வெளியே சென்றார். அதுமட்டும் இல்லாமல் அவர் பேட்டால் ஸ்டம்ப்பை அடித்து 'ஹிட் - விக்கெட்' முறையின் மூலம் விக்கெட் ஆகி இருக்கிறார்.
இவர்தான் உலகிலேயே முதல் போட்டியில் ஹிட் விக்கெட் முறையில் முதல் பந்தில் டக் அவுட் ஆனவர்.
ஆனாலும் பாவம்
இந்த நிலையில் சுனில் குறித்து இந்த நபர் மிகவும் சோகமாக எழுதியுள்ளார். அதில் ''இது மிகவும் கஷ்டம் தரக்கூடியது. அவர் காலையில் நிறைய கனவுகளுடன் எழுந்து இருப்பார். தன்னுடைய முதல் போட்டி எப்படி எல்லாம் இருக்கும் என்று நினைத்து இருப்பார். கடைசியில் இப்படி ஆகிவிட்டது'' என்று கூறியிருக்கிறார்.
எல்லாம் நல்லதுக்குத்தான்
சுனில் செய்த மோசமான சாதனை குறித்து இவர் இப்படி எழுதி இருக்கிறார். அதில் ''எல்லாம் எதிர்காலத்துல பேரக் குழந்தைகளுக்கு கதை சொல்றதுக்கு உதவும்'' என்று கூறியிருக்கிறார். சுனில் இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நல்ல தொடக்கம்
இந்த நிலையில் சுனிலுக்கு ஆறுதலாக இவர் டிவிட் செய்து இருக்கிறார். அதில் ''உலகின் சிறந்த கிரிக்கெட் பிளேயர்கள் பலர் முதல் போட்டியில் மிகவும் மோசமாக ஆடி இருக்கிறார்கள். இவர் கண்டிப்பாக அடுத்த போட்டியில் இருந்து சிறப்பாக விளையாடுவார் என்று நம்பலாம்'' என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications